பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 ஆய்ச்சியர் வீட்டில் எல்லாம் வெண்ணெய் திருடித் தின்றிருக்கிறான் என்று. மேலும் பள்ளியில் இரண்டாம் வகுப்பிலே, கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய் என்றும் படித்திருக்கிறோமே! ஆதலால் அங்கு வெண்ணெய் பிரதான நைவேத்தியமாக இருப்பது வியப்பில்லை இக் கோயிலின் மேல் அடுக்கில்தான் அப்பாஜி என்னும் பிராட்டியின் வடிவம் இருக்கிறது. சபாமண்டபத்தில் பலராமருக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. இன்னும் பிரத்தும்னன் அநிருத்தன் என்னும் கண்ணன் குடும்பத்தினர் அனைவருமே அங்கு எழுந்தருளியிருக்கிறார்கள். கோயில் பிரகாரத்தில் உள்ள சுற்றுக் கோயில்களில் துருவாசர், திரிவிக்கிரமன், மாதவநாயர், ராதாகிருஷ்ணன் முதலி யோருக்கு தனித்தனி கோயில்கள் இருக்கின்றன. இங்கு ராமனுக்கு மாத்திரம் கோயிலைக் காணோம். தமிழ் நாட்டு வைணவ ஆலயத்தில் எல்லாம் இடம் பிடித்து நின்று கொண்டிருக்கும் இந்த ராமன் இக் கோயிலில் இடம் பெறாத காரணம் என்னவோ தெரியவில்லை. கண்ணன் கோயிலில் ஐந்து விழாக்களை பிரதானமாக கொண்டாடுகிறார்கள். கண்ணனுடைய ஜன்மாஷ்டமி, தீபாவளி, ஆம் கட் என்றும் குஜராத்திய புது வருஷம் ரதயாத்திரை, ஹோலி என்பவைகளே அந்த விழாக்கள். விழாக்காலங்களில் ஏராளமான மக்கள் வந்து கடு இன்றனர். இக் கோயிலை ஆதியில் கண்ணனுடைய பேரன் வஜ்ரநாபன் என்பவனே மயன் உதவியால் கட்டினான் என்பது கர்ண பரம்பரைக் கதை. இக் கோயிலில் உள்ள துவாரகநாதர் சிறந்த வரப் பிரசாதியாயிருக்கிரு.ர். தன்னைக் காணும் ஆவல் கொண்ட பக்தன் ஒருவனுக்காக மாட்டு வண்டியில் ஏறிக் கொண்டு இரு நூறு மைல் தூரத்தில் உள்ள தாக்கோருக்குச் சென்று அப் பக்தன் இல்லத்திலேயே தங்கி இருந்திருக்கிறார். பரோடாவில் நரசிம்ம மேத்தா என்று ஒரு கவிஞர் இருந்