பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

327 திருக்கிறார். அவர் சிறந்த பக்தரும் கூட. பரோடாவில் உள்ள ஒரு வர்த்தகர் துவாரகை செல்ல விரும்பி துவாரகையில் உள்ள ஒருவருக்கு உண்டி (Bank draft) கேட் டிருக்கிறார். அங்குள்ள சிலர் ஏளனமாக வர்த்தகரை நரசிம்மமேத்தாவிடம் அனுப்பியிருக்கிறார்கள். நரசிம்ம மேத்தாவும் சாமல் உஷா என்னும் ஒருவருக்கு உண்டி எழுதிக்கொடித்திருக்கிறார். உண்மையில் சாமல்ஷா என்ற நபர் ஒருவருமே துவாரகையில் இல்லைதான். என்றாலும், பக்தன் நரசிம்ம மேத்தா கொடுத்த உண்டியலை கெளர விக்க துவாரகா நாதனே சாமல்ஷா வடிவில் வந்து உண்டியைப் பெற்று வந்த வர்த்தகருக்குப் பணம் கொடுத் திருக்கிறார். தமிழ் நாட்டில் வைணவ மத ஸ்தாபகரான ராமானுஜர் கி. பி. 1050-ல் துவாரகைக்கு வந்திருக் கிறார். அங்கு பாஞ்சராத்தில், முறைப்படி பூஜைகளை ஏற்பாடு செய்திருக்கிறார். வியூக மூர்த்தினையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார், இன்னும் கி. பி. 1240-ல் மத்வாச்சாரியார் துவாரகைக்கு எழுந்தருளியிருக்கிறார். ஞானேஸ்வரர், வல்லபாச்சாரியார், சைதன்யர், மீராபாய் முதலிய பக்தகோடிகள் பலர் துவாரகைக்குவந்துதுவாரகா நாதனை வணங்கியிருக்கிறார்கள் என்று வரலாறு கூறு கிறது. ஆதிசங்கரர் ஸ்தாபித்த மடங்களில் ஒன்று துவாரகையில் உண்டு. கண்ணன் கோயிலுக்குள்ளேயே சாரதாபீடம் ஒன்று இன்னும் இருக்கிறது. சங்கராச்சாரிய பரம்பரையில் வந்த ஆசாரியார்கள் இங்கிருந்து வரு கிறார்கள். ஆமாம். துவாரகையிலிருந்தபோதுதான் இந்தக் கண்ணன் ருக்மணியை ரதத்தில் ஏற்றிக் கூட்டி வந்து திருமணம் செய்து கொண்டார் என்று கதையில் கேட்டி ருக்கின்றோமே, அந்த ருக்மணியைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்றுதானே கேட்கிறீர்கள். அந்த ருக்மிணி துவாரகநாதன் கோயிலுக்கு வடக்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள ஒரு தனிக்கோயிலில் இருக்கிறாள்.