பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 கிருஷ்ணனுக்குரிய பணிவிடையில் இருந்தபோது துருவாச மகரிஜி வந்திருக்கிறார். அவரை வரவேற்கவில்லை என்ப. தால் அந்த நாடெல்லாம் பாழாகப் போகும்படி சபித் திருக்கிறார். ஆதலால் துவாரகையின் பெரும்பகுதி அதன் வளம் எல்லாம் இழந்து பொட்டலாய்க் கிடக்கிறது. அந்தப் பொட்டலில் ஒரு மூலையிலே சமீப காலத்தில் ருக்மணிக்கு ஒரு கோயிலைக்கட்டி அவளை அதில் இருத்தியிருக் கிறார்கள். அங்குள்ள சுவர்களில், துருவாசர் சாபமிட நேர்ந்ததையும் பின்னர் ருக்மணி சாப விமோசனம் பெற்ற வரலாற்றையும் சித்திரங்களாகத் தீட்டிவைக்கின்றனர். இக்கோயிலுக்குச் சென்று ருக்மணியையும் வணங்கி விட்டே திரும்புதல் வேண்டும். துவாரகை அன்று 12 யோசனை தூரம்தான் பரவி இருந்தது. அங்கு அழகான பூஞ்சோலைகளும், கனிதரும் மரங்களும், மாடமாளிகை களும், தாமரைத் தடாகங்களும் நிரம்பியிருந்தன என்று பழைய வரலாறு கூறுகின்றது. ஆனால் இன்றோ வெயிலுக்கு ஒதுங்க ஒரு மரம் கூடக்கிடையாது. ஒரே பொட்டலாக இருக்கிறதே என்று ஐயுறுவோம். எல்லாம். அந்தப் பொல்லாத மகரிஷி துருவாசரது சாபத்தால் நேர்ந்ததுதான் என்று ருக்மிணி கோயிலுக்குப் போய்த் தான் தெரிந்து கொள்வோம். துவாரகையில் கண்ணனே பிரதான தெய்வம் என்றாலும், சிவனுக்கும் அங்கு ஒரு கோயில் இல்லாமல் இல்லை. ஓர் ஒதுக்குப் புறத்தில் சித்தேஸ்வரர் கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது. இந்த ஊரிலேயே நான் கண்ட ஒரேமரம், ஓர் ஆலமரம்தான் இக்கோயில் வாயிலில் நிற்கிறது. கோயில் வாயிலில் விநாயகர் வடிவம் ஒன்றிருக் கிறது. ஆனால் அழகாக இல்லை. கோயிலின் உள்ளே மிகச் சிறிய வடிவில் லிங்கத் திருவுருவில் சித்தேஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார். அவரைச் சுற்றி நாகபாணம் ஒன்று அமைத்து வழிபடுகிறார்கள்.