பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

331 பாடிய பாடல்களில் எல்லாம் சிறப்பான பாடல் நம்மாழ்வார் துவராபதி மன்னனைப் பாடிய பாடலே. அன்னை என் செய்யில் என்? ஊரென் சொல்லில் என்? தோழிமீர்? என்னை இனி உமக்கு ஆசையில்லை அகப்பட்டேன் முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே ! என்ற பாடல் சுவையான பாடல் தானே. நாமும் அந்தத் துவராபதி மன்னன் வாசுதேவன் வலையில் அகப்பட்டுக் கொண்டால் மீளவழியறியாது தான் மயங்குவோம்.