பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333 குமாரி கேட்கிறாள். அவள் இதயத்திலும் கருணை பிறக் கிறது. அவளுமே ஒடுகிறாள், ராஜகுமாரன் இருந்த காட்டிற்கு. அங்கேயே ராஜகுமாரனுடன் சேர்ந்திருந்து தவம் இயற்றுகிறாள். பின்னர் இருவரும் தங்கள் தபோ பலத்தால் அழியாத சாம்ராஜ்யமாகிய முக்திப்பேறு பெறு கின்றனர். இப்படி ஒரு கதை. இப்படித் துறவு பூண்ட ராஜ குமாரன் தான் நேமிநாதன். அவனுடன் சேர்ந்து துறவி யான ராஜகுமாரி தான் ராஜுல். இது நடந்தது குஜராத் தில் உள்ள கிர்னார் காட்டில் என்று ஜைன இலக்கியம் கூறுகிறது. இந்த நேமிநாதரே ஜைன தீர்த்தங்கரில் ஒருவர். அந்த தீர்த்தங்கரருக்கு அழகிய கோயில் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அந்தக் கோயில் இருக்கும் இடம் ஒரு மலைச்சிகரம். அன்று அற்புத சிகரம் என்றனர். இன்றோ அற்புதம் என்ற பெயர் குறுகி அபூசிகரம் என்றிருக்கிறது. அந்த அற்புத சிகரத்தில் இரண்டு பிரபல மான சிற்பக் களஞ்சியமான கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயிலில் ஒன்றே நேமிநாதர் கோயில். இன்னோரு கோயில் அந்த நேமிநாதருக்கு முந்திய தீர்த்தங்கரரான ஆதிநாதர் கோயில், இனி அபூ மலைச் சிகரத்தை நோக்கி நாம் நடக்கலாம் கோயில்களுக்கும் சென்று அங்குள்ள சிற்ப அதிசயங்களைக் கண்டு மகிழலாம் அபூசிகரம் இன்றைய ராஜஸ்தான் ராஜ்யத்தில் ஆரவல்லி மலைத் தொடரில் இருக்கிறது. கடல் மட்டத் திற்கு மேல் சுமார் 4000 அடி உயரத்தில் உள்ள அபூ சிகரம் செல்ல நாம் அகமதாபாத்திலிருந்து டில்லி செல்லும் ரயில் பாதையில், அபூரோட் ஸ்டேஷனில் இறங்க வேண் டும். அந்த ஸ்டேஷனில் இறங்கி காரிலோ, ,பஸ்ஸிலோ 18 மைல் மலைமேல் சென்றால் அபூநகரம் வந்து சேரு வோம். அடர்ந்த காடுகள், பசும் புல்தரைகள். அருவி பாயும் ஆறுகளைக் கடந்து இந்தப்பாதை செல்கிறது"