பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 ரோடு அவ்வளவு சிறப்பாக இல்லாவிட்டாலும், வசதி யாகச் சென்று சேருதல் கூடும். அபூ சிகரத்தில் உள்ள அதிசயக் கோயில்களையும் அற்புதச் சிற்பங்களையும் சென்று காண்பதற்கு முன் அபூவின் பழைய வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்துக் கொள்ளுதல் நல்லதல்லவா. அபூ மலையைப் பற்றி இரண்டு வரலாறுகள் இருக்கின்றன. இரண்டுமே பழைய புராண வரலாறுகள் தாம். ஆதி காலத்தில் அபூ அடர்ந்த காடாக இருந்திருக்கிறது. அங்கு பல முனிவர்கள் இருந்து தவம் செய்திருக்கின்றனர். அப்படித் தவம் செய்த முனிவர் களில் ஒருவர் வசிஷ்டர். அவருடைய பசுவான நந்தினி ஒரு நாள் ஒரு பெரிய பள்ளத்தில் விழுந்து விடுகிறது. அந்தப் பள்ளத்திலிருந்து பசுவை வெளியேற்றுவது மிக சிரமமான காரியமாக இருந்திருக்கிறது. பசுவை வெளியேற்றிய பின் வசிஷ்டர் சிவனைப் பிரார்த்தித்திருக்கிறார். அந்தக் கிடு கிடு பாதாளத்தை நிரப்பிவிடும்படி வேண்டியிருக்கிறார். வசிஷ்டர் விருப்பப் படி சிவபெருமானும், அற்புதன் என்ற பெயர் படைத்த ஒரு பெரிய நாகசர்ப்பத்தை அந்தப் பள்ளத்தை நிரப்ப உத்தரவிட்டிருக்கிறார். உத்தரவுப் படியே அற்புதனும், பல மலைகளைப் பெயர்த்து எடுத்து அந்தப் பள்ளத்தில் போட்டு நிரப்பியிருக்கிறார். அப் போது அந்தப் பிரதேசமே கிடு கிடுத்திருக்கிறது. சிவ பெருமான், இராவணன் கைலைமலையினை அசைத்த போது செய்தது போல், தன் பெருவிரலை ஊன்றி மலையின் அசைவை நிறுத்தியிருக்கிறார். இப்படி அற்புதன் செய்த சேவையினால் ஏற்பட்ட மலைக் குன்றையே அற்புதக் குன்று என்று நாமகரணம் செய்திருக் கின்றார் சிவபெருமான். இது ஒரு கதை. மற்றொரு கதை இந்தக் காட்டிலேதான் கெளதம முனிவரும் தன் துணைவியான அகல்யையுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.