பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நெறிய அடர்த்த அந்தக் கைலாயரை வணங்கி விட்டுக் கீழே இறங்கி கோயிலை ஒரு சுற்றுச் சுற்றினால் அங்கு இன்னும் பல சிற்பவடிவங்களைக் காணலாம். எல்லாம் காத்திரமான பெரிய பெரிய வடிவங்கள். இந்தக் கைலாசநாதர் குடைவரையைக் கண்டு இந்தியக் கட்டிடக் கலையை நன்கு அலசி ஆராய்ந்து எழுதிய பெருமகன் பெர்ளிப்ரவன் (Percy Brown) மனிதனது உள்ளம் உயர்ந்திருக்கிற நிலையில் எழுந்த ஒரு அற்புதக் கலைக் கோயில் இது -என்று எழுதியிருக்கிறான். the Kailash is an iliustration of one of the rare occasions when men's minds, hearts and hands work in union towards the consummation of an ideal argårgy outrumalo Ljøgoff.3053, கிறார். எல்லோராவைப் பார்த்துவிட்ட திருப்தியிலேயே அவுரங்காபாத் நோக்கி நடந்து அங்கு ஒரு நாள் இரவு தங்கி சிரமபரிகாரம் செய்து கொண்டு மேல் நடந் தால் பிரசித்தி பெற்ற அஜந்தா குடைவரைகளைக் காணச் செல்லலாம். அங்கேயும் வாகூரா நதிக்கரையில் அர்த்த சந்திர வடிவில் அமைந்திருக்கும் மலைச்சரிவில் கிட்டத் தட்ட முப்பது குடைவரைகள் இருக்கின்றன. அஜந்தா சித்திரத்திற்குப் பேர் போனவை என்றுதான் படித்திருக்கி றோம். ஆனால் இங்கு சென்றால் சித்திரம், சிற்பம், கட்டி டக்கலை என்ற மூன்று துண்கலைகளுமே சிறப்பாய் அமைந் திருப்பதைக் காணலாம். முதல் குடைவரையே பிரம் மாண்டமான அளவில் அமைந்த ஒன்று. அங்குதான் புத்தர், போதி சத்துவர்-இவர்கள் வாழ்க்கையோடு ஒட்டிய புத்த ஜாதகக் கதைகளை எல்லாம் சித்திரங் களாகத் தீட்டி வைத்திருக்கின்றனர். எண்ணிறந்த பெண் வடிவங்கள் ஒவ்வொரு குடைவரையிலும் சித்திரங்களாக நின்று, பார்க்கும் ஆடவர் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொள்ளும். அஜந்தா பெண்கள் எல்லோருமே அழகு வாய்ந்தவர்கள். அழகுக்கு அழகு செய்யும் தலை