பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

335 இந்த கெளதமருடைய சிஷ்யனாய் உதங்கர் வந்திருக் கிறார். அவருடனேயே தங்கி குருகுலவாசம் செய்திருக் கிறார். பதினாறு வருஷகாலம் இப்படித் தங்கியிருந்து பூரண ஞானம் பெற்றுத் தன் இருப்பிடத்திற்கு திரும்ப எண்ணியிருக்கிறார். உதங்கர் இப்படித் திரும்பும்போது குருவினிடம் தான் என்ன தட்சிணை கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். குரு பத்தினியான அகலிகையோ குருவையும் முந்திக் கொண்டு செளதேச முனிவரது மனைவி அணிந்திருக்கும் குண்டலங்களைக் கொணர்ந்து கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். உதங்கரும் மிக்க சிரமத்துடன் செளதேசரது மனைவியை அணுகி, அவளது குண்டலங்களைப் பெற்று திரும்பியிருக்கிறார். திரும்பும் வழியில் களைப்பு மிகுதியால் ஒரு மரத்தடியில் தங்கியிருக் கிறார். பின்னர் அயர்ந்து துரங்கியிருக்கிறார், அந்தச் சமயம் அம்மரத்தில் இருந்த நாகசர்ப்பம் ஒன்று இறங்கி வந்து குண்டலங்களை எடுத்துச் சென்றிருக்கிறது. சிரமத்தோடு கொண்டு வந்த குண்டலங்களை இழந்து விட்டோமே என்று உதங்கர், வருந்தி, மலைகளுக்கு எல்லாம் அரசனான இமவானிடமே முறையிட்டிருக் கிறார். தன் புத்திரர்களில் ஒருவனான ஹக அற்புதனிடம், குண்டலங்களை அந்தப் பாம்பினிடமிருந்து மீட்டுத்தரச் சொல்லியிருக்கிறார். தந்தையின் கட்டளைப்படியே அந்த அற்புதன் குண்டலங்களை மீட்டு உதங்கரிடம் சேர்த்திருக் கிறான். உதங்கரும் குருபத்தினி கேட்ட குருத கதினையைக் கொடுத்து விட்டு தன் இடம் சென்றிருக்கிறார். உதங்கர் குண்டலங்களைப் பெற உதவிய அற்புதன் பெயராலே அந்த மலைச்சிகரம் அற்புத சிகரம் என்று அழைக்கப் பட்டிருக்கிறது. அற்புதம் அபூ என்று பின்னர் குறுகியும் இருக்கிறது. அபூ நகரத்தைச் சென்றடைந்ததும் நம் கண் முன் வருவது ஒரு பெரிய ஏரிதான். அதை நக்கி ஏரி என்கின்