பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 றனர். பால்கடல் ஆனாலும் நாய் நக்கித்தானே குடிக்கும் என்பது பழமொழி. அதைப்போல இங்கு ஏதாவது நாய் நக்கிக் குடித்ததால், நக்கி ஏரி என்று பேர் பெற்றதோ என்று எண்ணத் தோன்றும். அப்படி எல்லாம் இல்லை. பாஷ் கலி என்று ஒர் அசுரன். அசுரன் என்றாலே தேவர் களுக்கு இடுக்கண் செய்திருப்பான் என்பதுதான் தெரியுமே. அந்த அசுரனது கொடுமைகளைத் தாங்க இயலாது தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டிருக்கின்றனர், பிரம் மனும் அவர்களை இந்த அற்புத மலையில் தங்கியிருக்கச் சொல்லியிருக்கிறார். அப்படி இத்தலத்திற்கு வந்த தேவர்கள், அசுரனின் பாதையிலிருந்து ஒதுங்கியிருக்க தங்கள் நகத்தாலேயே பூமியைக் கீறி ஏற்படுத்திய ஏரி தான் நக்கி ஏரி என்று பெயர் பெற்றிருக்கிறது: அரை மைல் நீளமும் கால்மைல் அகலமும் இ ரு ப து அடி ஆழமும் உள்ள ஏரியில் இன்று உல்லாசமாக மக்கள் தோணிகளில் ஏறி உலவி வரலாம். ஏரிக்கரைகளிலே உள்ள சிறு கற்குன்றுகள் தவளை போலவும், நாய்த்தலைப் போலவும் இருக்கின்றன. இவைகளில் தவளைக்குன்று பிரசித்தமானது. ஏரியின் தென்புறத்தில் ரகுநாத்ஜி கோயில் இருக்கிறது. 14-ம் நூற்றாண்டில் ராமானந்தர் என்பவரால் இந்த ரகுநாதர் ஆலயம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. இந்த ஏரிக்கரையிலிருந்து ந |ா ன் கு ஐந்து மைல் வடமேற்கே சென்றால் அற்புத தேவி கோவில் அசலேஸ்ரர் கோயில், அனுமான் ஆசிரமம், வசிஷ்டர் ஆசிரமம் முதலி யவைகளைக் காணலாம். வசிஷ்டர் ஆசிரமத்தில் உள்ள கோயிலில், ராமனும் லக்ஷ்மணனும் இருபுறம் இருக்க இடையே வசிஷ்டர் வீற்றிருக்கும் கோலத்தில் இருக்கிறார். ஆனால் நாம் வந்தது இந்தக் கோயில்களைக் கான அல்லவே! அற்புத மலையில் உள்ள அதிசயக் கோயில் களைக் காண அல்லவா என்று ஞாபகப்படுத்திக்கொண்டு கொஞ்சம் கிழக்கு நோக்கி நடந்தால் டில்வாடா என்ற பகுதிக்கு வந்து சேருவோம். மெயின் ரோட்டிலிருந்து