பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

337 கொஞ்சம் நடந்து இரண்டு சந்துகள் திரும்பினால் ஒரு சிறு கோயில் தென்படும். இந்தக் கோயில்தானா அதிசயக் கோயில், இதன் அமைப்பு ஒன்றும் அதிசயிக்கத் தக்கத் தாக இல்லையே என்று எண்ணிக்கொண்டே மேல் நடந்தால், ஓரிடத்தில் ஒன்றிரண்டு காவல்காரர்கள் நிற்பார்கள். அவர்கள் காலில் உள்ள செருப்பைக் கழட்டிவிட்டு மேலே நடவுங்கள் என்பர். அப்படியே நடந்து தென்பக்கம் உள்ள படி வழியாக உள்ளே சென்றால் ஒரு வாசல் தெரி யும். அங்குள்ள கோயிலின் வெளித்தோற்றத்தைக் கண் டால் அது நமக்கு மிகவும் ஏமாற்றத்தையே அளிக்கும். ஆனால் அந்த வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், நாம் இந்த உலகில்தான் இருக்கின்றோமா இல்லை. அதிசயமான தேவர் உலகத்திற்கே வந்துவிட்டோமா என்று தோன்றும். அப்படி நம்மை அதிசயிக்க வைக்கும் கோயில்தான் ஆதிநாதர் கோயில் என்றாலும் அந்தக் கோயில் ஆதிநாதர் பெயரால் வழங்கப்படவில்லை, அந்தக் கோயிலைக் கட்டிய விமலாஷா என்பவர் பெயரால் விமலாவாசிகி என்றே அழைக்கப்படுகிறது. கோயில் முழுவதும் ஒரே சலவைக்கல் மயம், கோயில்வாயிலிலேயே, இந்தக் கோயில் முதலாம் பீமதேவரது ஆஸ்தானத்தில் இருந்த அமைச்சர் விமலாஷாவினால் 1032-ம் ஆண்டு பதினெட்டு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது என்று எழுதி வைத்திருக்கிறார்கள். என்ன, இதை கேட்டதும் மூர்ச்சித்து விட்டீர்களா? ஆம். அந்தக் கோவில் கட்ட ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாலே பதினெட்டுக்கோடி. சரியாக பதினெட்டுக்கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. அதுவும் ஆண்களுக்கு தினசரி கூலி 5 பைசாவும், பெண் களுக்கு கூலி மூன்று பைசாவும் என்றிருந்த காலத்தில். அப்படி என்றால் பணவீக்கம் மிகுந்து, கூலியும் உயர்ந்து இருக்கும் இக்காலத்தில் இக்கோயிலின் மதிப்பு எத்தனை கோடியிருக்கும் என்று கொஞ்சம் கணக்குப் போட்டுதான் பாருங்களேன். பொருளாதார சாஸ்திர அறிவெல்லாம் கூட நமக்கு இப்போது துணைவராது. அப்படி விை