பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 மதிக்க இயலாத அற்புத சிருஷ்டியாக இருக்கிறது. இக்கோயிலை விமலாஷா கட்டுவதற்கு காரணமாயிருத்த வரலாற்றையுமே கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். விமலாஷாவின் வழிபடு தெய்வம் அம்பாஜி. அப்படி யிருந்தும் ஜைனர்களின் 23-வது தீர்த்தங்கரரான பார்சவ: நாதருக்கு 360 கோயில்கள் கட்டியிருக்கிறார், இந்த விமலாஷா. இதனால் அம்பாஜி கடுங் கோபம் அடை கிறாள். அவள் கோபத்திற்கு அஞ்சி விமலாஷா ஒடி ஒளி கிறான். அம்பாஜியும் அவன் கட்டிய கோயில்களை எல்லாம் அழித்து விடுகிறாள். கடைசியில் அந்த அம்பாஜி கட்டளை இட்டபடியே டில்வாராவில் முதல் தீர்த்தங் கரராகிய ஆதிநாதருக்கு இந்தக் கோயிலைக் கட்டியிருக் கிறான். கோயில் உட்புரத்தில் ஒரு சுற்று மண்டபம் வராந்தாவாக அமைந்திருக்கிறது. அதன் நீளம் 240 அடி. அகலம் 90 அடி. அந்த மண்டபத்தைத் தாங்கி நிற்பவை எல்லாம் சிறந்த சிற்ப வேலைப்பாடமைந்த சலவைக்கல் துரண்கள் இந்த மண்டபத்தை சுற்றி 5.2 தீர்த்தங்கரர் களின் வடிவங்கள் அமைக்கப்பட்ட சிறு சிறு கோயில்கள். அங்கும் சுவர், விதானம், தரை, துரண் எல்லாம் சலவைக் கல் தான். தீர்த்தங்கரர்கள் எல்லோருமே ஒரே அச்சில் வார்த்தவர்கள் போல்தான் இருப்பார்கள் அவர்கள் அழகானவர்களும் அல்ல. அவர்களது பாதங்களின் அடியில் செதுக்கியிருக்கும் பதுமம், முதலியவைகளைக் கொண்டு தான் அவர்கள் யார் யார் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த சிரமம் எல்லாம் நமக்கு வேண்டாம். இந்தக் கோயில் கட்டக் காரணமாயிருந்த அம்பாஜிக்கு கோயிலின் தென்மேற்கு மூலையில் ஒரு சந்நிதி-இவற்றை எல்லாம் பார்த்து விட்டுத்தான் முற்றத்திற்குள் இறங்க வேண்டும். முற்றம் திறந்த வெளி முற்றம் அல்ல. நாற்பது துண்களால் தாங்கப்பட்ட மண்டபம் அது. அந்த மண்டபத்திற்கு நடுநாயகமாய் எட்டு சிறந்த வேலைப் பாடமைந்த தூண்கள் தாங்கி நிற்கும் விதானம் ஒன்று. அந்த விதானத்தில் லஸ்தர்குளோப்புகள் எல்லாம்