பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 என்னும் நேமிநாதர் கோயில், அவரை 22-வது தீர்த்தங் கரர் என்று ஜைனசரித்திரம் கூறுகிறது. இக்கோயிலைக் கட்டியவர்கள் வாஸ்து பாலா, தேஷ்பாலா என்னும் சகோதரர்கள், இவர்கள் இக்கோயிலை பன்னிரண்டு கோடி குபாயில் 1231-ம் வருஷம் கட்டியிருக்கின்றனர். தங்கள் தமையனான லூனா என்பவர் பெயரைக் கோயிலுக்குச் சூட்டியிருக்கின்றனர். இந்தக் கோயில் அமைப்பும் அந்த விமலவாசகி கோயிலைப் போலத்தான் என்றாலும் இங்கு சிறப்பாயிருப்பது வட்டவடிவமான விதானம்தான். இன்னும் துரண்கள் மேலே அமைந்திருக்கும் தோரணங்கள், ஏதோ துணியால் கட்டப்பட்டவைதானோ என்று தோன்றும். கூர்ந்து நோக்கினால் அவையும் சலவைக் கல்லால் ஆனவையே என்று அறிவோம். இங்கு நேமிநாதர் சந்நிதியை அடுத்த மண்டபத்தில் இரண்டு பக்கத்தில் இரண்டு மாடங்கள் அமைத்து அதில் இரு தீர்த்தங்கரர் களை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அவைகளே துராணி, ஜிதானி ஆலயம் என்கின்றனர். இன்று ஒவ்வொன் றையும் கட்ட ஒன்றேகால் லட்சம் ரூபாய் ஆயிற்றாம். அந்தத்தொகை முழுவதையும் வாஸ்துபாலா, தேவிபாலா சகோதரர்களின் மனைவியரே கொடுத்தார்களாம். ஆம் பதிக்கேற்ற சதிகளாயிற்றே அவர்கள், அவர்களது கைங் கர்யமும் கொஞ்சம் இருக்க வேண்டாமா என்று எண்ணி னார்கள் போலும். எல்லோருடைய அன்பும் ஆர்வமும் சேர்ந்து இரண்டு அற்புதமான கலைக்கோயில்களைச் சிருஷ்டித்திருக்கிறது. இந்த அற்புத மலையில் உள்ள அதிசயக் கோயில் களைப் பற்றிச் சொல்ல எனக்கு சொற்களே அகப்பட மாட்டேன் என்கிறது. திருப்பெருந்துறையிலே இருந்த மரத்தடியிலே அடியவர் கூட்டத்துள் இருந்த இறைவன் வாதவூரரை ஆட்கொண்டபோது அவர் பெற்ற அனுபவத் ைத