பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343 ஒமர்கய்யாமும், தேசிக விநாயகம் பிள்ளையும், சொன்ன சொர்க்கம் இதுதானோ என்று ஐயுறுவோம். அவ்வளவு ரமணியமான இடம் அது. அங்கு கடவுள் படைத்த இயற்கை எழிலும், மனிதன் படைத்த கைவண்ணத் திறமை கைகோத்து உலவுகின்றன. அங்கே, ஊரைச் சுற்றி மலைகளும் அம்மலைகளுக்கு இடையே வளர்ந்திருக்கும் காடுகளும் அமைந்து இயற்கை அழகை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும். இத்தகைய இயற்கைச் சூழ்நிலை அமைந்த நகரம் அது. எங்கு பார்த்தாலும் ஒரே சலவைக் கல் அரண்மனைகள்தான், அழகான ஏரிகள். அவ்வேரி களைச் சுற்றி வளைந்து வளைந்து செல்லும் பாதைகள். ஏரியின் நடுவிலேயும் அலங்காரமான மாளிகைகள். இத்தனை கோலாகலத்துடன் அமைந்த நகரத்தை இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாது, அதனால் தானே அது இந்தியாவின் வெனிஸ் என்று பெயர் பெற். றிருக்கிறது. மேல்நாட்டார் ஒன்று சொல்வார்கள், *வெனிலைப் பார் அதன் பின் இறந்துவிடு! என்று, நான் சொல்வேன், உதய்புரியைப் பார்க்கவே நாம் வாழலாம். ஒரு தடவை பார்த்தபின் இன்னும் பல தடவை சொல் வதற்காகவே வாழலாம் என்பேன் நான், அத்தகைய அழகிய நகராம் உதயபுரிக்கே செல்கிறோம் நாம் இன்று. உதயபுரி செல்ல மேற்கு பிராந்திய ரயில்வேயில் ரட்லம் ஜங்ஷனில் இருந்து 185-மைல் மேற்கு நோக்கி ரயிலில் செல்லலாம். தற்போது போட்டுக் கொண் டிருக்கும் உதயபுரி ஹிமத்நகர் ரயில்பாதை முற்றுப் பெற்றால் அகமதாபாத்திலிருந்தே உதயபுரிக்கு எளிதாகச் செல்லலாம். தக்க வசதி உடையவர்கள் என்றால், அகமதாபாத்திலிருந்தோ இல்லை டில்லியிலிருந்தோ ஆகாய விமானத்திலும் பறந்து செல்லலாம். ரோடு வழியாகக் காரில் போவதானால், அபூ ரோட்டிலிருந்து நேர் வழியிலே கொஞ்சம் சுற்றி வளைத்து மார்வார் வரை வடக்கே போய்த்தான் தெற்கே திரும்ப வேண்டும். ஆதலால் ரயிலில் போவதுதான் நல்லது. ரயில்வே