பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 ஸ்டேஷன் ஊரின் கீழ்க்கோடியில் இருக்கிறது. இங்கிருந்து மேற்கு நோக்கிச் சென்றே உதயபுரியைப் பார்க்க வேண்டும். உதயபுரி இரண்டு பகுதிகளாக இருக்கிறது. பழமையான நகரம் மலைச்சரிவில் இருக்கிறது. சமவெளியிலேதான் புதிய நகரம் விஸ்தரிக்கப்பட்டிருக் கிறது. பழைய நகரைச் சுற்றி ஒரு பெரிய மதில்சுவர் கட்டப்பட்டிருக்கிறது. அதன் நீளம் ஆறுமைல். ஐந்து அடி அகலமும் இருபது அடி உயரமும் உடைய அந்த மதில் சுவரில் பத்து வாயில்கள் அமைத்திருக்கிறார்கள். இவை களில் நான்கு வாயில்கள் பிரமாதமானவை. கிழக்கு வாயிலை சுரஜ்போல் என்றும், வடக்கு வாயிலை ஹத்திபோல் என்றும், மேற்கு வாயிலை பிரம்மாபோல் என்றும் தெற்கு வாயிலை கிஷான்போல் என்றும் அழைக் கின்றனர். இவ்வாயில்களில் ஒன்றான கிழக்கு வாயில் வழியாகத்தான் உதயபூர் நகரத்திற்குள் செல்லவேண்டும். அங்கு முதல் முதல் நம் கண்முன் வருவது மகாராணாவின் அரண்மனைதான். ராஜஸ்தானத்தில் உள்ள அரண்மனைகளில் எல்லாம் பெரிய அரண்மனை இதுதான் என்கின்றனர். அம்மாளிகை ஒரு மகா ராஜாவால் கட்டப்பட்டதல்ல. பல ராஜாக்கள் பல காலம் நினைந்து நினைந்து கட்டியது என்று பேசுகின்றன சரித்திர ஏடுகள், சோட்டி சித்ரசாலை, மானக்மஹால் மோத்தி மஹால், பாரிமஹால் என்று பல பகுதிகள். எல்லாம் சலவைக்கல் கட்டிடங்கள். கண்ணாடிகள் பதித்து அலங்காரம் செய்திருக்கின்றனர். அதில் எல்லாம் இன்றைய இந்தியாவின் தேசியப் பறவையாம் மயில் வண்ணத்தோகையை விரித்து ஆடும் காட்சியை வர்ணக் கண்ணாடிகள் மூலம் அமைத்துக் காட்டியிருக்கின்றனர். இது அற்புதமான காட்சியாக இருக்கும். அரண் மனையில் சித்திரங்களுக்கும் குறைவிருக்காது. அரண் மனை பிச்சோலா ஏரிக்கரையில்தான் இருக்கிறது.