பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

345 ஆதலால் நாம் ஏரிக்கரைக்கே செல்லலாம். இந்த ஏரி மூன்றரை சதுர மைல் பரப்பில் அமைந் திருக்கிறது, முன்னர் பி ச் ேக | ல |ா, ரங்சாகர், ஸ்வரூபசாகர், துரத்தாலை என்னும் நான்கு பகுதிகளாக இருந்து இப்போது எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து பிச்கோலா ஏரி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் தென்வடல் நீளம் மூன்று மைல். கீழ மேல் நீளம் இரண்டு மைல். இந்த ஏரிக் கரையிலிருந்து மேற்கு நோக் கினால் மலைகளும் மரங்களும் பசிய நிறத்தோடு கூடிய ஏரித்தண்ணிரும் நவநவமான கனவுலகத்தையே காட்டும். அன்று அவ்வையார் பாடினார், ஆடுங் கடை மணி ஐவேல் அசதி அணிவரையில் நீடும் கயற்கண்ணியார் தந்த ஆசை நிகழ்தரிதால், கோடும் குளமும் குளத்தருகே நிற்கும் குன்றுகளும் காடும் செடியும் - அவளாகத் தோன்றும் என் கண்களுக்கே என்ற பாட்டிற்கு ஏற்ப அமைந்த காட்சியாகத் தோன்றும் அந்தக் காட்சி. இந்த ஏரிக் கரையில் நின்று மட்டுமே பார்த்து திருப்தி அடைய முடியாது. அங்கு அந்த ஏரியின் நடுவில் இருக்கும் இரண்டு அரண்மனைகளையும் சென்று காணவேண்டாமா? அங்கு போவதற்கு வசதியான படகுகள் இருக்கின்றன. அந்தப் படகுகளுக்கு கட்டணம் செலுத்தி ஏறிக்கொண்டு ஏரியில் மிதந்து சென்றால், சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரகன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஒட்டி விளையாடி வருவோம் 2738–22 -