பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. சித்துர்கோட்டையில் மீராகோயில் சமீபத்தில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் பெரு. மன்றத்தின் மகாநாடு ஒன்று நடந்தது. அதில் ஒரு பட்டி மன்றம் கூடி விவாதித்த பொருள் இலக்கியத்திற்கு ஆக்கம் தருவது காதலா? வீரமா? என்று விவாதித்தவர்கள் எல்லாம் ஆங்கில இலக்கியம், சமஸ்கிருத இலக்கியம் தமிழ் இலக்கியங்களிலிருந்து பலசான்று காட்டி தங்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவு தேடினர். கடைசியில் இலக்கியத் திற்கு மிகவும் ஆக்கம் தருவது காதலே என்று தீர்ப்புக் கூறப்பட்டது. அதற்குச் சான்றாக பாரதியார் பாடிய காற்றிலேறி விண்ணையும் சாடுவோம் கர்தற்பெண்கள் கடைக்கண் பணியிலே என்று ஆதாரம் காட்டப்பட்டது. ஆனால் எனக்கு இந்த வடநாட்டு யாத்திரையில் ஒரு ஊருக்குச் சென்றதும், அந்த ஊரின் புகழை எப்படி காதலும் வீரமும் கலந்து பரிமளிக்கச் செய்திருக்கின்றன என்று எ ண் ண த் தோன்றிற்று, அந்த நகரம்தான் ராஜஸ்தானத்தில் உள்ள சித்துார். அங்குள்ள மீவார் ராணாக்களும் அவர்களது படை வீரர்களான ராஜபுத்ர வீரர்களும் நாட் டைக் காக்க எ த் த ைக ய போர் புரிந்திருக்கிறார் கள், அங்கிருந்த ராணிபத்மினியின் அழகை அலா வுதின் கில்ஜி என்பவன் கண்ணாடியில் கண்டு மோகித்து அவளை அடைய படையெடுத்து வந்து போர் புரிந்ததும், அந்தப் போரில் ராணுவம் கோட்டையையும் வீழ்த்திவிட, ராணிபத்மினி மற்றைய ராஜபுத்திர பெண் மணிகளும் எப்படித் தீப்பாய்ந்து வீரமரணம் எய்தினார்கள் என்பவையெல்லாம் நமக்குத் தெரிந்தவைதான். இன்னும்