பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 சிறப்பாக, இதுதானே வடநாட்டு ஆண்டாள் எனப்படும் மீரா கிரிதர கோபாலனின் பேரில் தீராத காதல் கொண்டு அவனையே கணவனாக அடைந்து அவனுடன் இரண்டரக் கலந்ததும் இங்குதான் என்று அறிகிறபோது நம் மெய் சிவிர்க்கிறது. ஆம் பல வருஷங்களுக்கு முன் கோகில கான பூரீமதி எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் பக்த மீராவாக் திரைப்படத்தில் நடித்தபோது பாடிய பாடல்கள் எல்லாம் நம் காதில் ஒலிக்கத் தொடங்கி விடுகிறது: கிரிதர கோபாலா-பாலா ச்யாமள சரீரகெளஸ் துபஹாரா பீதாம்பரதர பிரபோ முராரே நந்த குமாரா மனமோகன கள பிருந்தாவனசா துளசீஹாரா கிரிதர கோபாலா கம்ஸ்விதாரா மீராமாலை ஸ்ரோ விஹாரா என்ற மீரா பஜன் பாடல்கள் எல்லாம் எழுந்த மண்ணல்லவா இந்த சித் தூர் கோட்டை. அந்த சித்துளர் கோட்டைக்குச் செல்கிறோம் நாம் இன்று. சித்துரர் கோட்டை செல்வதற்கு பம்பாயிலிருந்து டில்லி செல்லும் ரயிலில் ஏறி ரட்லம் ஜங்ஷனில் இறங்கி அங்கிருந்து ஆஜ்மீர் செல்லும் ரயிலில் ஏறவேண்டும். நடுவழியில் சித்துணர்கர் என்ற ஸ்டேஷனிலே இறங்க வேண்டும். ரோடு மார்க்கமாகச் சென்றால் உதயப்பூர் போய் அங்கிருந்து எழுபது மைல் வட கிழக்காக வர வேண்டும். சித்துரர் ஸ்டேஷனிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் சித் தூர் கோட்டை இருக்கிறது. அக்கோட்டை, பக்கத்தில் உள்ள நிலப்பரப்பைவிட 500 அடி உயரமுள்ள ஒரு குன்றின் மேல் கட்டப்பட்டிருக்கிறது. அது தென் வடலாய் மூன்றரை மைல் நீளமும் கிழமேலாய் அரை மைல் அகலமும் உள்ள இடத்தில் இருக்கிறது. கோட்டை சூழ்ந்திருக்கும் இடம் 700 ஏக்கர் விஸ்தீரணம் எனக்