பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 ஜயஸ்தம்பம். இவ்விரண்டில் காலத்தால் முந்தியது கீர்த்தி ஸ்தம்பமே. அது கோட்டையின் கீழ் மதில் சுவர்பக்கம் இருக் கிறது. இந்த ஸ்தம்பம் பண்ணிரண்டாம் நூற்றாண்டில் pஜா என்னும் சமணவர்த்தகர் ஒருவரால் கட்டப்பட்டிருக் .கிறது. அடித்தளத்தில் முப்பது அடி குறுக் களவு உள்ள தாகவும் 75 அடி உயரமுள்ளதாகவும் இருக்கிறது. அதன் உச்சிக்கு ஏற உள்ளேயே படிகட்டுக்கள் இருக்கின்றன. ஐந்து மாடிகள் உடையதாய் இந்த ஸ்தம்பம் நிற்கிறது. சமண சமயத்தின் இருப்பத்திநாலு தீர்த்தங்கரர்களில் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதருக்கு என இந்த ஸ்தம்பம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தம்ப திகம்பர சமணர் களுடையது என்று தெரிகிறது. அதற்கு ஏற்பவே சிற்ப வடிவங்களும், வேலைப்பாடுகள் நிறைந்து இருக்கின்றன. இதற்குப் பக்கத்திலேயே சமணர் கோயில் ஒன்று இடிந்து கிடக்கிறது. அங்கும் சமண மதத்தைச் சேர்ந்த தேவ தேவியர் வடிவங்கள் இருக்கின்றன. ஜயஸ்தம்பம் ராணா கும்பா என்பவர் மாவாநாட்டு மகம்மது கில்ஜி என்பவனை வெற்றி கண்டதற்காக 1460-ம் எழுப்பப்பட்ட சின்னம் இது. இதுவும் கீர்த் தி ஸ்தம்பத்தைப் போன்றதே. அடித் தளத்தின் குறுக்களவு 47 அடி. ஒன்பது மாடிகள் கொண்ட தாய் 122 அடி உயரமாக அமைந்திருக்கிறது. இந்த சமயத்து தெய்வவடிவங்களை சிற்பவடிவில் ஏந்தி நிற்கிறது. எல்லாம் அந்தத் சித்திரத்தில் (bas relief) செய்யப்பட்ட சிற்பவடிவங்களாகவே இருக்கும். ராணா கும்பாவின் அரண்மனை இடிந்து கிடக்கிறது, ஆனால் அது ராஜபுத்திரர் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. யானை கட்டும் தறி, வரவேற்புக்கூடம் சூரிய நமஸ்காரத்திற்கு என்று அமைந்த விதானம் என்றெல்லாம் அரண்மனைப் பகு தி க ள் அழகழகாய் இருக்கின்றன. பூமிக்கடியிலும் நிலவரைகளை அமைத்து கட்டிய கட்டிடம் அது. அந்த நிலவறைகளில் ஒன்றில்தான் முதல் முதல் ஜௌஹர் நடந்திருக்கும்