பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

357 என்று எண்ண வேண்டியிருக்கிறது. ராணி பத்மினியின் அரண்மனை மிகப்பெரிய கட்டிடம். ஒரு குளக்கரையில் இருக்கிறது. ஒரு கட்டிடம் ராணியின் வசந்த மண்டபமாக இருந்திருக்கிறது. இந்த அரண்மனையில்தான் அலாவுதீன் கில்ஜி ராணியின் அழகை ஒரு கண்ணாடியில் கண்டு மகிழ்ந். திருக்கிறான். ரரிணி பத்மினியின் கணவர் ராவல் ரத்தன்சிங் என்பவரது அரண்மனையும், ஜெய்மால்டி. பட்டா என்ற மாவீரர்களின் வீடுகளும் உருத்தெரியாமல் அழிந்து கிடக்கின்றன. என்ன, இங்கே கோயில்களே கிடையாதா என்று: தானே கேட்கிறீர்கள்? சரித்திரப் பிரசித்தியும், கலைப், பிரசித்தியும் உடைய கோயில்கள் பல இங்கு இருக்கின்றன. பூரீநகர் செளரி என்பது ஒரு சமணக் கோயில், பதினாறாவது தீர்த்தங்கரரான சாந்தி நாதருக்கு எனக் கட்டப்பட்ட கோயில் அது, கும்பாராணாவின் கஜான்ஜி ஒருவரது திருக்குமாரன் வெங்கா என்பவன் 1448-ல் கட்டினான் என்று கல்வெட்டு ஒன்று கூறுகிறது. வெளிச் சுவர் முழுவதும் சிற்பவடிவங்கள் நிறைந்து, இது ஒர் அழகிய கலைக்கோயில் என்று பறைசாற்றிக் கொண்டிருக் கிறது. இன்னும் சத்பீஸ் தோரர் என்னும் 27 கோயில்கள் சமணர் கோயில்களே. எல்லா இடத்தும் சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. இங்குள்ள சிவன் கோயில்களில் சிறப். பானது ஜண்டா சங்கர் கோயில் தான். ஒரு பெரிய டோமோடு கூடிய விதானம் இருக்கிறது. இங்கே, அங்கும் நிறைய சிற்பவடிவங்கள் உண்டு. சங்கரர் மூலத்தானத்தில் கோயில் கொண்டிருக்கிறார். சாமி தேஸ்வாரா மகா தேவருக்கு என்று ஒரு கோயில். இதை மாளவநாட்டு: போஜராஜன் கட்டியிருக்கிறான். 1428-ல் ராணா மொகல் என்பவன் பழுது பார்த்திருக்கிறான். குஜராத்தில் இருந்த, சாளுக்கிய மன்னன் குமாரபால் சித்துார் வந்து வெற்றி கண்ட விவரம் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஆதியில் சூரியனார் கோயிலாக இருந்து காலாக,