பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. உஜ்ஜயினி மகாகாலர் "அகோ! வாரும் பிள்ளாய், மகாராஜாதி ராஜ னான விக்கிரமாதித்யனும், அவனது மதியூகி மந்திரியுமான பட்டியும் இரண்டாயிர வருஷகாலம் இருந்து அரசாண்ட உஜ்ஜயினிப்பட்டணம் இதுதான். இங்கு 多 தான் பொன்னாலும் மணியாலும், முத்தாலும், பவளத்தாலும் அலங்கரிக்கப்பட்டதும், முப்பத்திரண்டு மோகப்பதுமை. களால் சிறப்பிக்கப்பட்டதுமான அரியாசனம் இருக்கிறது. அந்த அரியாசனத்திலிருந்துதான் குறைவற்ற புகழ் உள்ள குணாளன், காடாறுமாதம் நாடாறு மாதம் என இருந்து நாடுகாத்த கோமகன், நான்கு வேதம் ஆறு சாஸ்திரம், பதினான்கு புராணம், அறுபத்தி நான்கு கலைகள் தொன்னுாற்றாறு தத்துவங்கள் எல்லாவற்றையும் கற்றுணர்ந்த மேதை. கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை, இந்திராஜாலம் மகேந்திரஜாலம் முதலிய ஜால வித்தைகள், காயசித்சி, அட்டமாசித்தி முதலிய சித்தி வித்தைகளை எல்லாம் கற்று, ஐம்பத்தாறு தேச ராஜாக்களையும் அடிமை கொண்டு வாழ்ந்த விக்கிரமாதித்யனைக் காணவா வருகிறாய்? அந்த மகாராஜனைப் பார்ப்பதற்கு முன் என்னை அறிமுகம் செய்து கொள்ள வேண்டாமா?" என்று கேட்டுக் கொண்டே வேதாளம் ஒன்று என் முன் வந்தது. என்னையா? கனவு கண்டீரா? அல்லது புத்திக் கோளாறா?' என்று தானே நினைக்கிறீர்கள். இல்லை. நல்ல நினைவோடேயே தான் சொல்கிறேன். என்னை மட்டுமல்ல, இந்த உஜ்ஜயினிப்பட்டணம் செல்லும் அன்பர்களை எல்லாம் இப்படித்தான் வேதாளம் வரவேற். கும் கற்பனை உலகத்தில்தான். ஆம், அந்த விக்ரமாதித். தன், பட்டி, வேதாளம் எல்லாம் இருந்து அரசாண்ட உஜ்ஜயினி பட்டணத்திற்கே செல்கிறோம் நாம் இன்று.