பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

361 உஜ்ஜயினி செல்வதற்கு, பம்பாயிலிருந்து ஆக்ரா செல்லும் ரயிலில் ஏற வேண்டும். நாக்டா ஜங்ஷனில் இறங்கி ரயில் மாறி உஜ்ஜயினி சென்று சேரலாம். இல்லை சென்னையிலிருந்தே புறப்படுவதானால் டில்லி செல்லும் கிராண்ட் டிரங்க். எக்ஸ்பிரஸ்ஸில் ஏறி போப்பால் ஜங்ஷனில் இறங்கி வண்டி மாறி உஜ்ஜயினி சென்று சேர லாம். இல்லை காரிலேயே வட இந்தியா சுற்றுப் பிரயாணம் செய்பவர்களாக இருந்தால், அஜந்தாவிலிருந்து ஜால்கன் போய், அங்கிருந்து இந்தோர் வந்து, அங்கு ஒரிரவு தங்கி சிரமபரிகாரம் செய்து கொண்டு அங்கிருந்து காரிலேயே நேர் வடக்கே முப்பத்தி மூன்று மைல் சென் றாலும் உஜ்ஜயினில் வந்து சேரலாம். - உஜ்ஜயினி ஒரு பெரிய நகரம். அதன் ஜனத்தொகை ஆறுலட்சம். இன்று பொலிவிழந்திருந்தாலும், அன்று. மிகவும் பிரசித்தி அடைந்த பட்டணமாக அல்லவா இருந் திருக்கிறது. இந் நகரின் சரித்திர ஏடுகளைப் புரட்டினால் எத்தனை எத்தனை கதைகளையோ அவை கூறும். விக்கிரமாதித்தன் காலத்தில் மாளவ நாட்டின் தலை நகராக விளங்கியிருக்கிறது. கி. மு. 6 முதல் 4-ம் நூற்றாண்டுவரை, கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு வருஷங்களுக்கு முன், இது அவந்தி நாட்டின் தலை நகராக இருந்திருக்கிறது, வடமொழி இலக்கியங்களிலும், தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், யசோதர காவியம், உதயணன் பெருங்கதை என்னும் நூல்களிலும் இந் நகர வர்ணனை காணப்படுகிறது. பெருங்கதையில் பிரச்சோதனனுடைய ராஜ தானியாக இந்த அவந்தி கூறப் படுகிறது. இங்கு நடந்த நீர் விழாவை பெருங்கதை சிறப் பாகக் கூறுகிறது, உதயணன் வஞ்சனையால் சிறையி லிருந்தது முதலாக, வாசவதத்தையை யானை மீது ஏற்றிக் கொண்டு சென்றது வரையில் உள்ள நிகழ்ச்சிகள் எல்லாம் இங்கு தான் நடந்திருக்கின்றன. படை முதலிய அரண் களாலும், சிற்ப செல்வர்களாலும் செல்வ நிறைவினாலும்

  1. 738–23