பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

367 கோதில் வாய்மையிஞன் உனை வேண்டிய குறைமுடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய் ஆதலால் வந்து உன் அடியினை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்து அம்மானே. என்பது மங்கை மன்னரது பாடல். இன்னும் காளிதாஸன் மேகதுரதத்தில் இ ந் த உஜ்ஜயினியின் புகழைப்பாடி இருக்கிறான். "ஏ மேகமே நீ மாலை வேளையில் உஜ்ஜயினி சென்றால், மாலைச் சூரியன் மறையும்வரை அங்கிருந்து இரவில் உன் இடிமுழக் கத்தால் மகா காவருடைய பறையைக்கொட்டி அவரை வணங்கிய பின்பே மேற்செல்வாயாக’ என்று பாடி இருக் கின்றான். இப்படியே பல்லோரும்பாடும் புகழுடன் உஜ்ஜயினி அன்று விளங்கியிருக்கிறது.