பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

371 கிறார்கள். மேற்கு மொகலாய மன்னன் அக்பர் காலத் தில்தான் இங்கே பிராந்தியத்திற்கு ஒரு தலைமை ஸ்தானம் இந்த ஆஜ்மீருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலை நாட்டிலிருந்து வந்த ஸர்தாமஸ் ரோ என்பவர், முதல் முதல் மொகலாய மன்னன் ஜஹாங்கீரைச் சந்தித்து தன் அரசன் கொடுத்த தகுதிப் பத்திரத்தை 1816-ல் இங்குதான் கொடுத்திருக்கிறான். ஷாஜஹான் மூத்த மகள் தாள சிக்கோ பிறந்ததும் இந்த நகரில்தான். ஷாஜகான் இங்கு அடிக்கடி வந்து தங்கியிருக்கிறார். இங்குள்ள ஆனசாகர் ஏரிக்கரையிலே ஓர் அழகிய மாளிகை யையும் கட்டியிருக்கிறான். எண்ணுாறு அடி உயர்ந்திருக் கும் தாராகர் மலையடிவாரத்திலே இந்நகரம் இருக்கிறது. இங்குள்ள கோட்டையை தாராகர்கோட்டை என்றே அழைக்கிறார்கள். இந்த ம ைல ய டி வாரத்திலே தான் அடாய்தின்கா ஜோன்ப்ரா என்ற அழகிய கட்டிடம் இருக்கிறது. இதன் வேலைப்பாடு மிகவும் சிறந்தது, இரண்டரை நாட்களிலே கட்டி முடித்த கட்டிடம் என்கிறனர். இங்குள்ள முஸ்லீம் மசூதியில் சிறப் பானது தர்கா குவாஜா சாஹிப் என்பதுதான். நகரத்தின் மத்தியில்தான் அக்பர் கோட்டை இருக்கிறது . அதன் வாயில் எண்பத்திநாலுஅடி உயரம், நாற்பத்து மூன்று அடி அகலமும் என்றால் ,அக்கோட்டையின் கம்பீரத்தை கொஞ்சம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாமே. இந்த ஆஜ்மீருக்கு வடமேற்கு ஏழுமைல் தூரத்தில் தான் புஷ்கரம் இருக்கிறது. செல்லும்பாதை ஆணசாகர் ஏரிக்கரை வழியாகவும் தாராகர்மலை வழியாகவும் தான் செல்கிறது. புஷ்கரத்தின் சிறப்பு எல்லாம் அங்குள்ள தீர்த்தத்தில்தான். அகலிகை கதை நமக்கு தெரியும். கெளதம முனிவரின் மனைவியான அகலிகையைக் கண்டு மோகித்து இந்திரன் அவளை வஞ்சித்துக் கற்பழித்து விடு கிறான். விஷயம் தெரிந்ததும் கெளதம முனிவர் அகலிகையை கல்லாகப் போகும்படியும் இந்திரன் ஆயிரம்