பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.2 கண் பெறவும் சபிக்கிறார். இச்சாபம் தீர பிரம்மனை,நோக்கி இந்திரன் தவம் செய்கிறான். பிரமனும் கங்கை நதியையே ஒரு குளத்தில் பெருகச் செய்து அதில் தன் கமண்டலத்திலி ருந்த தண்ணிரையும் தெளித்துப் புனிதமாக்குகிறார். அந்த தீர்த்தமே புஷ்கரம். இதில் நீராடியே இந்திரன் தன் பாவங் களைத் தீர்த்துக் கொள்கிறான். இந்தத் தீர்த்தம் புனித :மான தீர்த்தமாகக் கருதப்படுகிறது. இங்கு பரந்தாமன் தீர்த்த ரூபியாகவே எழுந்தருளியிருக்கிறான் என்பது ஐதீகம். இதனையே தீர்த்த ராஜா என்கின்றனர். இன்னும் ஒரு விளக்கம், புஷ்கரம் என்றாலே தாமரை என்றுதான் பொருள். தாமரைக்கும் இங்குள்ள குளத்திற்கும் ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. பிரம்மா தான் தவம் செய்ய ஒரு இடம் தேடி அலைந்திருக்கிறார். அவர் கையிலி ருந்த தாமரை தவறி விழுந்து விடுகிறது. அப்படி விழுந்த இடத்திலே பூமி பிளந்து நீர்பெருக்கெடுத்து ஓடி இருக் கிறது. அதனால் அக்குளத்தையே புஷ்கரம் என்று அழைத் திருக்கின்றனர். மூன்று இடங்களில் பூமிபிளந்து பெருக் கெடுத்ததால் அவற்றை முறையே ஜேஷ்டமத்ய கனிஷ்ட புஷ்கர தீர்த்தங்கள் என்கின்றனர். இம்மூன்று தீர்த்தங் களிலும் முறையே பிரம்மா விஷ்ணு மூர்த்தி மூவரும் உறைவதாக ஐதீகம். ஆதலால் புஷ்கரம் சென்றதும் அங்குள்ள குளத்தில் இறங்கி படிக்கட்டுகளில் நின்று கொண்டே ஒரு முழுக்குப் போடலாம். குளம்நிரம்ப ஆழம் கிடையாது. அப்படி முழுக்கப் போட்டுவிட்டு நம் பாவங் களை எல்லாம் கழுவியபின் கரையேறி அங்குள்ள கோயில் களைக் காணச் செல்லலாம். ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. பத்ரி, பூரி, ராமேஸ்வரம் துவாரகை முதலிய யாத்திரைகளின் பலன் புஷ்கரத்தில் நீராடினால்தான் பூர்த்தியடையும் என்பது வேதவாக்கு. புஷ்கரத்தில் உள்ள பிரதான கோயில் பிரம்மாவின் கோயில்தான். அது ஊருக்கு மேற்கே ஒரு சிறு குன்றின் மேல் இருக்கிறது. அதுஆதியில் கட்டப்பட்ட கோயில்