பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 இங்குள்ள வராகர் தமிழ் நாட்டில் பூரீமுஷ்ணத்தில் உற்றவர் போல கம்பீரமான தோற்றம் உடையவர் அல்ல. பழைய கோயிலை ஒளரங்கசீப் இடித்து மட்டமாக்கியிருக் கிறார். பின்னர் நான்கு சிகரங்களோடு கூடிய கோயிலை ராணா பிரதாபனின் பாட்டனார் மகாராணா கங்கா கட்டிமுடித்தார் என்று வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் தமிழர்களாகிய நமக்கு ஒர் அதிசயம் காத்து நிற்கிறது. ஒரு கோயில் வாயிலுள் நுழைந்து உள்ளே சென்றதும் நான் அதிசயத்து விட்டேன். காரணம், அக்கோயில் ராஜகோபுரம். நம் தமிழ் நாட்டுக்கோபுரம் போலவே இருந்ததுதான். கோயிலுள் சென்றாலும் கட்டிடக்கலை எல்லாம் நம் நாட்டுப்பாணிதான். இதை எல்லாம் விட அங்குள்ள பட்டாச்சாரியார்கள், எல்லாம் தமிழ் பேசுவதுதான் இன்னும் அதிசயம். தமிழ் நாட்டில் இக்கோயிலைக் கட்டி இங்கு இரவுக்கிரவே துரக்கிக் கொண்டு வந்து வைத்துவிட்டார்களா என்று எண்ணத் தோன்றும். விசாரித்தால், மணிராம் என்று ஒரு ஸ்ேட் இருந்திருக்கிறார். அவர் தீராத நோய்வாய்ப்பட்டிருந்த போது தமிழ் நாட்டு வைஷ்ணவப் பெரியார் ஒருவர் அவரது நோயைத் தீர்த்திருக்கிறார். ஷேட்ஜியோ தன் செல்வம் முழுவதையுமே அவரது காலடியில் கொட்டியிருக் கிறார். ஆனால் அவர் அதில் பைசா கூட தனக்கென எடுக்காது, அந்த ஷேட்ஜியைக் கொண்டே ரங்கநாதருக்கு ஒரு கோயிலைக் கட்டச் சொல்வியிருக்கிறார். தமிழ் நாட்டிலிருந்து சிற்பிகள் சென்றிருக்கிறார்கள். கோயில் 52 லட்சம் ரூபாயில் 1919-ல் கட்டி முடிந்திருக்கிறது. அகோபிலத்திலிருந்தே லட்சுமி நரசிம்மனை எழப்பண்ணிக் கொண்டு வந்து இங்கு இருத்தியிருக்கிறார்கள். கருவறை கயிலே மூலமூர்த்தியான பூரீ வைகுண்டநாதர் பூதேவி பூரீதேவி சமேதராக இருந்த திருக்கோலத்தில் இருக்கிறார். இன்னும் ராமர், தேசிகர், உடையவர், மகாலட்சுமி ஆண்டாள் எல்லோரும் தனித்தனி சந்நிதியிலே இருக் கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் புஷ்கரத்தில்