பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஆரியன் கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அவை விளங்குகின்றன. இக்கோயில்களை எல்லாம் பத்தாம் நூற்றாண்டிலே கன்டேலா மன்னர்கள் கட்டினார் கள் என்பது வரலாறு. இம்மன்னர்களில் முந்தியவர்கள் எல்லாம் நல்ல வைஷ்ணவர்களாகவும், பிந்தியவர்கள் சைவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவர் களே சைவம், வைஷ்ணவம் மாத்திரம் அல்ல சமணம் பெளத்தம் முதலிய பிற மதங்களையும் பாராட்டியிருக் கிறார்கள். சொல்லப்போனால் கஜுராஹோ கோயில் களில் மிகச் சிறப்பானவை சில சமணக் கோயில்களே: இங்குள்ள பெரிய ஏரியான கஜுராவில் கெளசத்யோகினி கோயில் என்று ஒன்று இருக்கிறது. அது சோழர்கள் கட்டிய கோயிலைப் போல முழுக்க முழுக்கக் கல்லாலேயே கட்டிய கோயில். மஞ்சள் கலந்த சிவப்பு நிறக் கற்கள் (Buff coloured sand storie) g6oor. Biggräs Gala" opsigtig ஈடுகொடுத்து நிற்கக் கூடியவை அக்கற்கள். கெளசத் என்றால் அறுபத்து நான்கு என்று பொருள்ாம். இங்குள்ள பாதாளக் கோயில்கள் எல்லாம் ஒரே இடத்தில் கட்டப் பட்டிருக்கின்றன. இக்கோயில்களுக்கு மதில்கள் ஒன்றும் கிடையாது. பிரம்மாண்டமான அளவிலும் இல்லை. இங்குள்ள பெரிய கோயில் நாதாரியா மகாதேவர் கோயிலே. 102 அடி நீளமும், 66 அடி அகலமும் உள்ள ஒரு பெரிய மேடைமீது கட்டப்பட்டிருக்கிறது. அக்கோயி லின் நீளமும் 10 அடி உயரமே. ஆனால் கோயில் ஒரு பெரிய மாடத்தின் பேரில் கட்டப்பட்டிருக்கிறது. மாடத் தின் நான்கு மூலைகளிலும் கட்டியிருந்த சிறு குடில்கள் இடிந்து போய்விட்டன என்றாலும், பிரதான கோயில் ஆசு அழியாமல் நிற்கிறது. மேலும் கோயிலின் ஒவ்வொரு அங்க மும் கலைக்கோயில் அது என்று பறைசாற்றிக் கொண்டி ருக்கிறது. கோயில் வாயிலிலேயே கல்லாலேயே அமைந்த ஒரு தோரண வாயில், அதில்தான் எத்தனை எத்தனை சங்கீத விற்பன்னர்கள்: அவர்கள் எத்தனை எத்தனையோ விதமான வாத்தியங்களை வாசித்துக் கொண்டிருப்பர்.