பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 மேதைகளும் கூடியிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்நகரை அமைத்திருக்கிறார்கள். உலகில் உள்ள பெரிய நகர அமைப்புகள் பற்றிய படங்களை எல்லாம் வருவித்து ஆராய்ந்தாலும் இந்திய சிற்பக்கலைத் திறனுக்கும், பண்பாட்டிற்கும், மாறுபடாத வகையிலே இந்நகர் அமைக்கப்பட்டிருக்கிறது. வீதிகள் எல்லாம் கிழமேலாகவும், தென்வடலாகவும் ஒடும். இங்குள்ள மாடங்கள் எல்லாம் பக்கத்தில் உள்ள மலையிலிருந்து கிடைக்கும் ஒருவகை ரோஜாவர்ணச் செம்மண்ணால் பூசப் பட்டிருப்பதால் முழுவதும் ரோஜா நிறத்திலேயே காட்சி அளிக்கும். இனி இந்நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினால் முதன் முதல் நாம் சென்று காண வேண்டியது அங்குள்ள அரண்மனையைத்தான். அது நகரின் வடபுறத்தில் சதுரம் சதுரமாக அமைந்த் வீடுகளுக்கு நடுவே கோட்டைக்கு உள்ளே இருக்கிறது. அரண்மனை வெளிமுற்றத்திற்கு செல்வதற்கு யாதொரு அனுமதியும் தேவையில்லை. அரண்மனைக்குச் செல்வதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைப்பதும் எளிதானதில்லை. அரண்மனையில், காண வேண்டியவை முபாரக்மஹால், எல்லோருக்குமே மகாராஜா தரிசனம் தரும் திவானி ஆம், அதிமுக்கியஸ்தர்களுக்குள் கலந்து பேசும் திவானிகாஸ், தர்பார் மண்டபம், சித்ரகூடம், முதலியவைகளே. அரண்மனை ஒர் அழகான கட்டிடம். அங்குள்ள சித்ர கூடத்தில் ராஜபுத்திர மன்னர்கள், வீரர்கள் படங்கள் எல்லாம் பெரிய பெரிய அளவில் எழுதி மாட்டப்பட்டிருக் கின்றன. ராதா கிருஷ்ணன் நடனமும், நாகமலை சித்திரங். களும் மிக மிக அழகானவை. அங்குள்ள புத்தக சாலையில் பாரசீக மொழியில் எழுதப்பட்ட மகாபாரதம் ராஜ்நாமா என்ற பெயருடன் இருக்கிறது. ஜெய்சிங் மன்னர் எழுதிய வானசாஸ்திரங்களும் உண்டு. இன்னும் ரேக கணிதம் என்னும் ஜியாமட்டிரியும் அராபிய மொழியில் இருக்