பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

389 டில்லி வந்து சேர்ந்ததும், நாம்சென்று காணவேண்டிய இடம் அண்ணல் காந்திஜி அமரர் ஆன பின் அவரது பூத உடலைத் தகனம் செய்த புண்ணிய பூமியையே தரிசிப் போம். அது தானே புது டில்லிக்கும் பழைய டில்விக்கும் இடையே யமுனை நதிக் கரையிலே இருக்கிறது. அதைத். தானே ராஜ கட்டம் என்று புனிதமான பெயரால் அழைக் கின்றோம். அங்கு ஒரு பிருந்தாவனமே உருவாகியிருக் கின்றது. அங்கு இறங்கி காலில் உள்ள காலணிகளைக் களைந்து விட்டு அங்கு விற்கும் புஷ்பங்களை வாங்கிக் கொண்டு ராஜகட்டத்தை அணுகலாம்! காந்திஜியின் உடல் தகனமான மேடையில் மலர்களைத் துரவி வணங்கி அண்ணலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு மீளலாம். அங்கிருந்து வடக்கு நோக்கி நான்கு பர்லாங்கு: நடந்தால், சரித்திரப் பிரசித்தி பெற்ற செங்கோட்டை, வந்து சேரு வோம், செங்கோட்டை மொகலாய மன்னன் ஷாஜஹா னால் கட்டப்பட்டது என்பது வரலாறு, 1838-ல் ஆரம் பித்து அதைக் கட்டிமுடிக்க 10 வருஷங்கள் ஆகியிருக் கின்றன. அக்கோட்டை 1100 அடி நீளமும் 550 அகலமும் உள்ள இடத்தில் ஒன்றரை மைல் விஸ்தீரணத்தில் பல கட்டிடங்களை உள்ளடக்கிக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது. அங்கு தான் சாதாரணமாக மக்களை மொகலாய மன்னர் சந்திக்கும் திவானி ஆமும், சிறப்பான வெளிநாட்டுத் துர்துவர்களைக் சந்திக்கும் திவாணி காஸும் இருக்கிறது, சிறந்த வேலைப்பாடுகளோடு கூடிய கட்டிடங்கள் அவை. அங்கு இன்னும் மும்தாஜ்மஹால், ரங்க்மஹால் முதலிய கட்டிடங்களும் இருக்கின்றன. திவானி ஆமீல் தான் பிரபலமான மயிலாசனம் இருந்திருக் கிறது, அதன் உத்தேசமான மதிப்பு பன்னிரண்டு லட்சம் பவுன் என்பர். அங்கேயே முத்துமசூதி ஒன்றும் இருக்கிறது. கலை அழகு நிரம்பிய கட்டிடம் அது. அத்தனையும் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்து தென்மேற்காக நடந்தால், பிரபலமான ஜும்மா மசூதியண்டை வந்து சேருவோம். அங்குதான் முஸ்லிம் சகோதரர்கள் எல்லாம் பிரார்த்.