பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 தனை செய்யக் கூடுகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்து பிரார்த்தனை செய்யும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும். இம்மசூதிதான் உலகிலுள்ள மசூதிகளில் எல்லாம் பெரியது என்பர். இதை அக்காலத் தில் 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டியிருக்கிறார்கள். மசூதிக்கு முன்புறம்தான் ராம்லீலா மைதானம் என்ற பெரிய மைதானம் இருக்கிறது. பெரிய பெரிய கூட்டங்கள் அங்குதான் கூடுகின்றன சுதந்திர தினவிழாவையும், குடி யரசு தினவிழாவையும் செங்கோட்டையில் கொடியேற்றிக் கொண்டாடும்போது. டில்லி மக்கள் அனைவரும் திரண்டு நிற்பதற்கு ஏற்ற மைதானமே அது. அத்தோடு ராமநவமி காலத்தில் ராவணன் முதலிய அரக்கர்களை பொம்மை களாகச் செய்து அங்கு வைத்துத்தான் தீயிட்டுக் கொளுத்தி விழாக் கொண்டாடுவார்களாம். ஜும்மா மசூதிக்கு வடபுறம் கொஞ்சம் நடந்து சென் றால், பழைய டில்லியில் பிரபலமான சாந்தினி செளக் என்னும் பெரிய தீவுக்கு வந்து சேருவோம். இந்த வீதியில் தான் ஷாஜஹான், ஒளரங்கசீப் முதலிய முகலாய மன்னர் கள் கோலாகலமாக பவனி வந்திருக்கிறார்கள். சாந்தினி செளக் என்றால் நிலவொளி வீசும் வீதி என்று பொருள். வீதியின் அகலம் 150 அடி. அதன் மேற்குக் கோடியில் பேத்பூரி மசூதியும் கீழ்க்கோடியில் ஒரு பிரபலமான சமணக் கோயிலும் இருக்கிறது. இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில்தான் சிஸ்கஞ்சு குருத்துவாரா இருக் கிறது. அது சீக்கியர்களுக்குப் புனிதமான இடம். அங்குள்ள ஆலமரத்தின் அடியில்தான் சீக்கியர்களின் ஒன்பதாவது குருதேவரான குருதேஜ் பஹதூர்சிங் என்பவர் மொகலாய மன்னன் ஒளரங்கசீப்பால் கொலை செய்யப்பட்டிருக் கிறார். டில்லியில் இன்று சீக்கியர்கள் சென்று வணங்கும் பிரதான கோயில் இந்தக் குருத்துவாராதான். அழகிய விமானத்தோடு கூடிய பெரிய கட்டிடம் அது. அங்கு ஒவ்வொரு நவம்பர் மாதத்திலும் குருநானக்கின் பிறந்த