பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 விட்டு புதுமை உருப்பெறவில்லை. அங்கே பழைமையும் புதுமையும் கைகோத்தே நடமாடுகின்றன. அங்கே புதுமை யும் பழைமையும் மாத்திரமா இணைகிறது. அங்கே கிழக்கும் மேற்குமே இணைகிறது. கட்டிடக்கலையானாலும் தத்துவ விசாரணையானாலும், உணவு, உடை, இசை, நாடகம் முதலிய எல்லாத் துறைகளிலுமே இந்த இணைப்பைப் பார்க்கின்றோம் நாம். இ ன் னு ம் வேகமாக ஒடும் மோட்டார் காரோடு நத்தைவேகத்தில் ஊர்ந்து செல்லும் கட்டைவண்டிகளும் ஒடும் அங்கே. குளிர்சாதனஅறைகளை உடைய பெரிய பெரிய ஹோட்டல்கள் ஒருபுறம், என்றால் தெருக்களிலே உள்ள பிளாட்பாரங்களிலும் கடைநடக்கும். பெரிய பெரிய மாடிக்கட்டிடங்கள் நிறைந்த வீதிகளிலே ஒலைக்குடிசைகளுக்கும் குறைவிருக்காது. பலதிறப்பட்ட நடன அரங்குகள் ஒரு புறம் இருந்தால், தெருக்களில் கிராமிய நடனங்கள் ஆடும் பெண்களும் இசைவாணவர் களுக்கும் குனறவிருக்காது. இப்படிப்பழைமையும் புதுமை யும், மேற்கும் கிழக்கும் கைகோத்து நடமாடுவதே இன்றைய டில்லி. இந்த டில்லியின் ஒரு பகுதியான பழைய டில்லியைத்தான் சென்றவாரம் சுற்றிவந்து விட்டோம், இன்று புது டில்லிப்பகுதிக்குப்போய் வருவோமா? டில்லியின் சரித்திரத்தில் முஸ்லீம் ஆட்சிக்குப் பின் தான் விளக்கம் கிடைக்கிறது என்றாலும் பதினோராம் நூற்றாண்டிலிருந்தே அ த ன் சரித்திரச் சின்னங்கள் ஆங்காங்கே தென்படவும் செய்கின்றன. கி.பி. 1050-ல் அனங்கபால் என்ற மன்னன் கட்டிய ராஜ்குந்த் நகரத்தில் அடையாளமாக இன்றிருப்பது பாழடைந்த ஒருகுளமும், சில இடிந்த கட்டிடங்களும், சூரியனுக்கு ஒரு கோயிலும் தான். இந்த அனங்கபாலுக்குப்பின்தான் முகம்மது கோரி படை எடுத்திருக்கிறான். அவனுக்குப்பின் வந்த ஆட்சிக்கு அடையாளமாக குதுப்மினார் எழுந்து நிற்கிறது. இது கூடச்சரியில்லை. இந்தக் குதுப்மினார் கோபுரத்தை தன் காதல்மனைவி சம்யுக்தை யமுனையைத் தரிசிப்பதற்காக பிருதிவிராஜனே கட்டிவைத்தான் என்றும் ஒரு கர்ணபரம்