பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வராகத்து உடலில் எண்ணரிய தெய்வ வடிவங்கள். ஆம். அண்டங்கள் அனைத்தையும் உண்டவன் உரு அல்லவா அது. இனி இந்த மைதானத்தை விட்டு கிழக்கு நோக்கி இரண்டு மைல் நடந்தால்தான் மற்றக் கோயில்களைக் காணலாம். அங்குதான் சமணக் கோயில்கள் இருக்கின்றன. சமணக் கோயில்களில் பிரதானமானது பார்சவநாதர் கோயில்தான். இக்கோயிலில்தான் காதல் கடிதம் எழுதும், கன்னி, காலிலே தைத்த முள்ளை எடுக்கும் மோகினி, இன்னும் குழந்தையோடு கொஞ்சும் கோகிலம், தலை வாரிப் பொட்டிட்டுக்கொள்ள முனையும் மங்கை, முதலிய பெண்ணரசிகளைக் காணலாம். ஒவ்வொருத்தியும் ஒவ் வொரு அழகுப் பெட்டகம். கஜராஉேறாவில் க ல் வி க் கலையை விளக்கும் சிற்ப வடிவங்கள் ஏராளமாக இருக் கின்றன. அக்கலையில் அறுபத்து நான்கு முறைகள் உண்டு, என்பர். ஆனால் அங்கு நாம் காண்பதோ 640-முறைகள். இன்னும் ஒரிஸ்ஸா கோயில்களிலும் இதே போன்று சிற் பங்கள் உண்டு. நாம்தான் அங்கு விரைந்து செல்ல இருக் கிறோமே. சரி. புவனேஸ்வரம், கோணாரக் முதலிய இ ட ங் களுக்கும் சென்று கலிங்க நாட்டுக்கலைக் கோயில்களையும் கண்டு விடுவோம். புவனேஸ்வரம் செல்வதற்கு ரெயில் தான் வசதி, ரோட்டில் சென்றால் கட்டாக்கில் மகாநதி எல்லாம் கடக்க வேண்டும். ஒரிஸ்ஸாவின், கோனாரக்கில் பூரியில் எல்லாம் கோயில்கள் இருந்தாலும், புவனேஸ்வரம் தான் கோயில்கள் நிறைந்த நகரம். இன்று அது ஒரிஸ் ஸ்ாவின் தலைநகரும்கூட அங்குள்ள கோயில்களும் பிரம் மாண்டமானவையே. அங்கு அ ன் று 7000 கோயில்கள் இருந்தன. அவற்றில் இன்று இருப்பது 500 என்றெல்லாம் உபசாரமாகச் சொல்வர். நாம் பார்க்க வேண்டியவைகள் எல்லாம் ஒரு சிலவே. அங்குள்ள கோயில்களில் பிரதான மானது லிங்கராஜ் கோயிலே. இக்கோயில் பிரகாரம்