பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.96 இருக்கும். வடக்குப் பகுதி தெற்குப்பகுதி என்று கூறுவர், உள்ளே நுழைவதற்கு அனுமதி வேண்டாம் என்றாலும் அங்குள்ளவர்கள், எங்கு உள்ளார்கள் என்பதை அறிய துணை வேண்டும் உள்ளே சென்று விட்டால் வெளியே வருகின்ற வழியே தெரியாது. வளைந்து வளைந்து எத்தனையோ படிக்கட்டுகளும் வராந்தாக்களும், இங்கு அதிக நேரம் செலவழித்து வீண்பொழுது போக்க வேண் டாம். நாம் ஏதோ பெர்மிட்டோ ராஜ்யசலுகையோ தேடி வந்தவர்கள் அல்லவே. இந்த சர்க்கார் காரியாலயங்களுக்கு இடையே செல் லும் ராஜவீதியில் மேற்கு நோக்கிச்சென்றால் ராஷ்டிரபதி பவன் வந்து சேருவோம். பிரம்மாண்டமான கட்டிடம் அது. அங்கு தானே பிரிட்டிஷ் சாம்ராஜ்ய பிரதிநிதியான வைஸ்ராய் அங்கு தங்கியிருந்திருக்கிறார். அங்கு நமது ராஷ்டிரபதி குடியரசுத் தலைவர் இன்று தங்கியிருக் கிறார். அங்கு நுழையவும் அனுமதி பெற வேண்டும். பற் பல ஹால்களைக் கடந்து ராஷ்டிரபதி பிரபலஸ்தர்களுக்குப் பேட்டி கொடுக்கும் மண்டபத்திற்கு வந்து சேருவோம். தரையெல்லாம் மெத்தென்ற கம்பளங்கள். அங்கெல்லாம் பெரிய பெரிய படங்கள் தங்கமுலாம் பூசிய சோப்ப்பாக் கள், அங்கெல்லாம் நிற்கவே நம் கால்கள் கூசும். கட்டிடத் திற்கு பின் பக்கம் உள்ள தோட்டம்தான் மொகல் கார்டன்ஸ் என்னும் பெரிய பூங்கா, அங்கு சென்றால் அது தான் பூலோக சுவர்க்கமோ என்று தோன்றும். அதைவிட்டு வெளியே வரவே மனம்இராது. இன்னும் கலை அழகில் ஈடு பட்டவர்கள் என்றால் அங்குள்ள பொருட்காட்சி சாலை யிலும் நுழைந்து பலபொருட்களைக் காணலாம். ராஷ்டிரபதி பவனிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் ராஜவீதியில் நடந்தால், இந்தியா கேட் என்னும் இடத் திற்கு வரலாம். இந்த ராஜவீதியில்தான் சுதந்திரதின அணிவகுப்பு நடக்கும். அதைக் காணவே இந்திய மக்கள்