பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

397 அனைவரும் திரண்டு எழுவர். அந்த வீதியில் நடக்கும் போது நமக்கு ராஜநடைபோட வரும். அங்கிருந்து வடமேற்காக நகர்ந்தால் புதுடில்லியின் பிரதான வியா பார ஸ்தலமான கான்னாட் பிளேஸ் என்னும் இடத்திற்கு வந்து சேருவோம். அங்கு விலைக்குக்கிடைக்காத சாமான் களே இராது. பணம்மட்டும் நிறைய இருந்தால் எந்தப் பொருளையும் வாங்கலாம். என்ன இப்படியே கட்டிடம், கடைகள் என்று இழுத்து அடித்துக்கொண்டு இருக்கிறீர்களே கோயிலே கிடையாதா என்று தானே கேட்கிறீர்கள்? புதுடில்லியில் பிரதான கோயிலான லட்சுமி நாராயணன் கோயிலுக்கே நடக்க லாம். கான்னாட் பிளேஸ் என்னும் வியாபாரத் தலத்திற்கு ேந ர் ேம ற் .ே க ஒருமைல் சென்றால் லட்சுமி நாராயணன் கோயிலுக்கு வந்து சேரலாம். டில்லியில் லட்சுமி நாராயணன் கோயில் என்றால் யாருக்கும் தெரியாது. பிர்லா மந்திர் என்று சொன்னால் தான் தெரியும். காரணம் இக்கோயிலைக் கட்டிய பெருமகன் சுகல் கிசோர் பிர்லா என்பவரே. அவரது பெயராலேயே கோயில் வழங்குகிறது. கோயில் ஒரிஸ்ஸா என்னும் கலிங்கப் பிரதேசத்தில் உள்ள கோயிலைப் போல் கட்டப்பட்டிருக்கிறது. பிரதான கோயிலுக்கு மூன்று சிகரங்கள். தமிழ் நாட்டுக் கோயில்களைப் போல் மாடத்தின் பேரிலே தான் கட்டப்பட்டிருக்கிறது. பல படிகள் ஏறியே கோயிலுக்குச் செல்லவேண்டும். இக் கோயில் முழுவதும் சிவந்த கற்களாலும், வெள்ளைச் சலவைக் கற்களாலும் கட்டப்பட்டவை. கோயில் சுவர் களில் எல்லாம் வேதம், உபநிஷதம், கீதை முதலிய நூல்களில் இருந்து வாக்கியங்கள் எழுதி வைக்கப்பட் டிருக்கும். இங்குள்ள பிரதான கோயிலில் லட்சுமி சமேதனாக நாராயணன் சலவைக்கல் வடிவில் நின்று கொண்டிருக்கிறார். சிறந்த சிற்பவடிவம் அல்ல, பட்டு உடுத்தி பணிபூண்டு நிற்பார். கோயில் வாயிலில் ஒரு