பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 கலையிலும் நகர நிர்மாணித்திலுமே ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். குறுகிய வீதிகள் மறைந்து, அகன்று பரந்த வீதிகள் தோன்றியிருக்கின்றன. வாயில் களுக்கு மேலேயுள்ள கதவங்கள் மறைந்திருக்கின்றன. சன்னல்களைச் சுற்றி தகடுகள் அமைத்து அதன் மூலம் சூரிய ஒளியையே உடைத்து கொஞ்சம் கொஞ்சமாக அதன் ஒளிவர வகை செய்திருக்கிறார்கள். நிரம்பச் சொல். வானேன்? கட்டிடங்களின் மாடிகளுக்கு ஏறப் படிக்கட்டுகள் இல்லாமல் பாதையை ஒரு ஸ்லோப் கொடுத்து அமைத்து சிறிதும் சிரமம் இல்லாமல் மாடி ஏறவகை செய்திருக் கிறார்கள். இப்படி எல்லாம் எங்கு ஐயா நடந்திருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். அப்படி பழைய மரபுகளை ஒதுக்கி, புதியதொரு சுதந்திர மரபை உருவாக்கிக் கட்டிய கட்டிடங்களையும், நகர அமைப்பையும் கொண்டது. இன்றைய பஞ்சாபின் தலைநகரமான சண்டிகர் என்னும் பட்டணம். அந்த சண்டிகரை நோக்கியே செல்கிறோம். நாம் இன்று. பழைய மரபு என்று பிணைப்படாமல், சுதந்திர இந்தியாவின் சின்னமாக அமைந்த நகரம் இது என்று நமது பாரதப்பிரதமர் நேருஜி அவர்கள் ஒரே வாக்கி யத்தில் இந்த நகர நிர்மாணத்தை புகழ்ந்திருக்கிறார்கள். சண்டிகர் செல்ல நான் வழி சொல்ல வேண்டிய தில்லை. ஒரு பெரிய ராஜ்யத்தின் தலைநகருக்கு வழி நான் சொல்வியா தெரிய வேண்டும். டில்லியிலிருந்து சிம்லா செல்லும் வழியில் அம்பாலாவிற்கும் கால்கா விற்கும் இடையில் இருக்கிறது டில்லியிலிருந்து ரயிலில் போகலாம். விமானம் மூலமாகவும் போகலாம். ரோடு வழியே காரில் போகிறவர்கள் என்றால் அம்பாலாகால்கா பெருவழிப் பாதையிலிருந்து பிரிந்து செல்லும் அம்பாலா ரூபர் ரோட்டில் நான்கு மைல் செல்ல வேண்டும், சண்டிகரி லிருந்து அம்பாலா, பாடியாலா, சிம்லா முதலிய முக்கிய மான நகரங்களை இணைக்க நல்ல ரோடுகள் போட்டிருக் கிறார்கள். இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட போது பாகிஸ்தான் எல்லையில் இருந்த மக்கள் பலர்