பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

405 679 கவிச்சக்கரவர்த்தி கம்பன் அன்று பாடினானே அவன் கண்ட ராமராஜ்ஜியத்தைப் பற்றி அதுதான் இப்படி உருவாகிக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றும். இன்னும் ஹைகோர்ட், சட்டசபைக் கட்டிடம், செக்ரடேரியட் என்னும் சர்க்கார் காரியாலயம் எல்லாம் இரும்பும் சிமெண்ட்டும் கொண்டு செய்த அற்புத சாதனைகள். இவைகளில் சன்னல் அமைந்திருக்கும். அழகே தனி. அவற்றையே ஸ்ன்ப்ரேக்கர்ஸ் என்ற புதிய பாணி என்கின்றனர். இன்னும் சில கட்டிடங்களில் சுவர் களில் குண்டுக்கற்களை அப்படி அப்படியே வைத்துக்கட்டி அதன்பேரில் பூச்சு இல்லாமலும் விட்டிருக்கிறார்கள். அது கொஞ்சம் கரடு முரடான வேலைதான் என்றாலும் பார்ப் பதற்கு அழகாகவே இருக்கிறது. எதையும் அழகு செய்தல் கூடும் என்று காட்டும் திறன் இக்கட்டிடக் கலை நிபுணர் களிடம் இருக்கிறது. என்ன பாதைகளையும் கட்டிடங்களையும் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறீரே இங்கே கோயில்கள் ஒன்றுமே கிடையாதா என்று கேட்கிறீர்களா, நகரத்தின் மத்தியில் மருந்துக்கு கூட ஒரு கோயிலைக்கானோம். ஆல. மரத்தடி விநாயகரோ இ ல் ைல, அரசமரத்தடிப் பிள்ளையாரோ அங்கு எழுந்தருளவில்லை தான். என் றாலும், ஊருக்கு வடமேற்காக உயர்ந்திருக்கும் ஒரு சிறு குன்றின் மேல் நான் முன்னரே சொன்ன சண்டி’ என்னும் மகாகாளிக்கு ஒரு கோயில் இருக்கிறது. கோயில் எண் கோணவடிவத்தில் சிறிய அளவில் இருக்கிறது. கோயிலை ஒரு சிகரம் அழகு செய்கிறது. அந்தச் சிகரத்தைச் சுற்றி பல சிகரங்கள் அமைந்திருப்பதுபோல ஒரு தோற்றம். கோயிலுக்குள் கருத்த அன்னையாம் காளி இருக்கிறாள். வீரம் மிகுந்த பாஞ்சால தேசத்து மக்கள் வணங்கும் காளி காண்பதற்கு பயங்கரியாகவும் இல்லை, அலங்காரியாகவும் இல்லை. சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கிறது. இது புதிய நகர நிர்மாணிகளால் கட்டப்பட்டதில்லை. முன்னரே