பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 கட்டப்பட்ட சிறிய கோயில். இங்கு வருவார் போவாரும், அதிகம் இல்லை. இன்றைய பஞ்சாபின் தலைநகருக்கு பெயர் கொடுத்த பெருமை தவிர அதற்கு வேறு பெருமை இருப்பதாகத் தெரியவில்லை. இங்கிருந்து கால்கா செல்லும் பாதையில் பதின்மூன்று மைல் வடக்கு நோக்கிச் சென்றால் ந ம் பிஞ்சோர் தோட்டம் என்னும் இடத்திற்கு வந்து சேருவோம். இத் தோட்டம் முகலாய மன்னர்களால் அமைக்கப்பட்ட ஒன்றாம். இத்தோட்டத்தை ஆதர்சமாக வைத்தே ராஷ் டிரபதி பவனில் உள்ள மொகல் கார்டன்ஸ் அமைக்கப் பட்டதென்கின்றனர். கண்கவர் வனப்புடைய தோட்டம் அது. எங்கு பார்த்தாலும் பசுமை. மலர்களோ பூத்துக் குலுங்கி லாகூரோ, அல்லது காஷ்மீரோ சென்று அங்குள்ள வடிாலிமார் குல்மார்க் தோட்டங்கள் முதலியவைகளைக் காணும் வாய்ப்பு இல்லாதவர்கள், இத்தோட்டத்தைப் பார்த்து திருப்தி அடையலாம். சிற்றுண்டி உடன் எடுத்து சென்றிருந்தால் அங்குள்ள அழகான சூழ்நிலையில் அவற்றை அருந்தி ஆனந்திக்கலாம். இங்கிருந்து பத்துப்பதினைந்து மைல் தொலைவிலேதான் கால்கா என்னும் இடம் இருக்கிறது. அதுவரை சாதாரண ரயிலில் சென்று அதன் பின் 56 மைல்கள் மலைமீது செல்லும் ரயிலிலோ அல்லது காரிலோ சிம்லா என்னும் மலைவாசஸ்தலம் செல்ல வேண்டும். கால்கா என்ற பெயரிலிருந்தே தெரிந்திருக்கும். அதுவும் ஒரு காளியின் தலம்தான் என்று. ஆம் அங்கு ஒரு சிறு காளிகோயில் உண்டு. காளிகா என்பதே கால்கா என்று வழங்குகிறது. வேறு சிறப்பாகக் கூற ஒன்றும் .கிடையாது.