பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. குருக்ஷேத்திரத்தில் கண்ணன் வட நாட்டில் பிரசித்தமான நதிகள் கங்கையும் யமுனையும் தான். அவை இரண்டும் கலக்கின்ற பிரயாகையிலே சரஸ்வதி நதியும் கலக்கிறது, என்பர்; ஆனால் இந்த சரஸ்வதி நதியை அங்கு நாம் காண்ப தில்லை. இந்த சரஸ்வதி நதி டில்லிக்கு மேற்கே நூறு மைல் தூரத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. இந்த சரஸ்வதி நதிக்கரையில் தான் முனி புங்கவர் இருந்து வேதங்களை ஒதியிருக்கிறார்கள். பிரம்மாவும் தேவர்களும் சேர்ந்து யாகங்கள் செய்திருக்கிறார்கள். வசிஷ்டரும் விஸ்வா மித்திரரும் இருந்து தவம் செய்து முக்தி பெற்றிருக் கிறார்கள். பாண்டவர்களும் கெளரவர்களும் போரிட்டிருக் இறார்கள். பகவான் கண்ணன் அர்சுனனுக்கு கீதோபதேசம் செய்திருக்கிறான். வேதவியாசர் இருந்து பாரதக்கதை எழுதியிருக்கிறார். குரு என்னும் அரசன் அங்கிருந்து ஆண்டிருக்கிறார். மனு இருந்து நீதி சாஸ்திரம் எழுதி கயிருக்கிறான். இத்தனை புராணப் பிரசித்திக்கு உடைய இடத்திலே பின்னர் சரித்திர காலத்திலேயும் பல பல போர்கள் நடந்திருக்கிறது. இந்த மன்னர் பலர் தங்கள் மகுடங்களை இழந்திருக்கிறார்கள். முஸ்லீம் மன்னர்கள் சிங்காதனத்தைத் துறந்திருக்கிறார்கள், மராத்தியர்களும், சீக்கியர்கள் தங்கள் வலியிழந்திருகிறார்கள். இப்படி ரத்தம் சிந்திச் சிந்தியே சிவந் கிடக்கும் இடம் தான் குரு rேத்திரம், குருக்ஷேத்திரம் என்ற உடனேயே நம் கண்முன் வருவது பாரதப் போர்தான். அதன் பின்னும் பல பல போர்கள் நடந்த இடம் தான் அது இது காரணமாகவே குருக்ஷேத்திரம் என்ற சொல்லிற்கே போர்க்களம் என்ற பொருள் வழங்க ஆரம்பித்துவிட்டது. நாம் இன்று அந்த குருக்ஷேத்திரத்திற்கே செல்கிறோம். நாம் செல்வது