பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 போர்க்களத்திற்கே செல்கிறோம், நாம் செல்வது போர்க் களத்திற்கு அல்ல. நாம்தான் யாரோடும் பகை கொள்ள வம் என்று கம்பன் வகுத்த வழியில் செல்பவர்கள் ஆயிற்றே! நாம் செல்வது கண்ணன் கீதோபதேசத்தைக் கேட்கவே. குருக்ஷேத்திரம் போரில் பார்த்தனுக்கு சாரதி யாய் அமைந்து தேரோட்டுகின்றான் கண்ணன். போர்க் களத்தில் பீதாமகர் பீஷ்மர் போன்ற உறவினர்களையும் எதிரிகளாய் கண்டவுடனே பார்த்தன், இவர்களை எல்லாம் கொன்று குவித்து நாம் பெறப்போகும் பலன் என்ன என்று மயங்கி வில் கையினின்று தரையில் வீழ அலமறுகிறான். அவனது சோர்வைக் கண்ட கண்ணன், தருமத்தைச் செய்யக் கலங்காதே. உனக்கென்று ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் முடித்து வைப்பவன் நானே' -என்று உபதேசிக்கிறான். மாயை என்று ஒருத்தி தன்பால் மனம் என்னும் மைந்தன் தோன்றித் தூய நல்லறிவன் தன்னைத் தோற்றம் இன்றாக்கி வைத்தான் தாயொடு தங்தை, மக்கள் தாரம் என்று இவர்பால் வைத்த நேயமும், அவன் தளுலே நிகழ்ந்த ஓர் நினவுகண்டாய் எனறும், என்னை நீ புகலக் கேண்மோ! எங்கும் ஆய் 'யாவும் ஆகி மன்னியபொருளும் யானே மறைக்கு எலாம் முடிவும் யானே. என்றும் உரைக்கிறான் கண்ணன் என்பார் வில்லிபுத் தூரார். ஆதலால் நாமும் அந்த கீதோபதேசத்தின்படியே எல்லாச் செயல்களையும் கிருஷ்ணார்ப்பணம் ஆக்குவதற்கு உரிய உள்ளத்திடத்தோடயே குருக்ஷேத்திரத்திற்கு செல்ல லாம் தானே. செல்வோமா?