பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சுபத்திரையுடன் எழுந்தருளியிருக்கிறான். அழகுடைய வடிவங்கள் அல்ல. மரத்தில் செய்து வர்ணம் பூசியிருக் கிறார்கள். கிட்ட நெருங்கிப்பார்த்தால் கொஞ்சம்கூட அழ. காயிராது என்றாலும், வெண்மையான சிகரத்தோடு, கம்பீரமாக நிற்கும் கோயில் அது. கோயில் சுவர்களில் சிற்ப வடிவங்கள் பல இருக்கும். பூரிஜகந்நாத்தில் கோயிலைவிட தேர்தான் அழகு என்பர். அந்தத் தேரைக் காணும்வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஆனால் படங்களில் தேரைப் பார்த்தால் அவ்வளவு அழகாக இருக்கும் என்று சொல் வதற்கில்லை. - கோனாரக் கோயில் பிரம்மாண்டமான கோயில். கருவறை மேல் எழுந்த சிகரம் இடிந்து போய்விட்டது. மூல மூர்த்தியான சூர்ய நாராயணனும் இல்லை. இன்று போக மண்டபத்தின் வாயில்களை எல்லாம் சுவர் வைத்து அடைத்து உள்ளே சென்று காண்பதற்கு தடை செய்திருக் கிறார்கள். கோயிலே ஒரு தேர்போல இருக்கிறது. பக்கத் துக்குப் பன்னிரெண்டு சக்கரங்கள் என்று 24 சக்கரங்கள் தேரை இழுத்துச் செல்வதாக பாவனை, கருவறையைச் சுற்றிய சுவர்களிலே கோஷ்டங்கள் அமைத்து காலைச் சூரியன், மத்தியான சூரியன் மாலைச் சூரியன் என்று வடிவங்கள் அமைத்திருக்கிறார்கள். எல்லாம் நல்ல அழகிய வடிவங்கள். கைகள் எல்லாம் சிதைந்திருந்தாலும் முகத் திலே சூரியப் பிரகாசம் வீசுகிறது. இக்கோயில் வெளிச் சுவர்களில்தான் கலவிக் கலையை விளக்கும்மிதுனச் சிற்பங்கள் பெரிய பெரிய அளவில் இருக்கின்றன. இவை களைக் காண்பதற்கே ஆடவரும் பெண்டிரும் அங்கே செல் கின்றனர் என்பர். கஜுராஹோவிலும், கோனாரக்கிலும் மிதுனச் சிற்பங்கள் நிறைய இருக்கின்றன. இச்சிற்ப வடிவங்களை கோயில்களில் செதுக்கி நிறுத்திடலாமா என்று கேட்பார் பலருண்டு. இதற்கு எத்தனையோ சமாதானங்களும் கூறு வர். கோயிலுக்கு வருவோர் உள்ள உறுதியைச் சோதிப்பதற்.