பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

417 வாழ்ந்திருக்கின்றனர். அதனால் இவர்கள் நிறைந்துள்ள பாஞ்சாலம். வீரம் விளைகின்ற நாடு என்று மக்கள் கருதி யிருக்கின்றனர். அதனால்தான், வீரத்திலே சிந்து தீரத்திலே - போரில் வீறிட்டு எழுந்திடும் காட்டினர் யாம் பாரதத்திலே புகழ் ஏற்றிச் சிறந்திடும் பாஞ்சால நாட்டிற்கு ஈடுமுண்டோ. என்று ஒரு பஞ்சாபிப் பெண் பாடுவதாக தமிழ்க் கவிஞர் ஒருவர் பாடி மகிழ்கிறார். அந்த சீக்கியர்களின் முக்கிய மான நகரம்தான் அமிர்தசரஸ். அந்த அமிர்தசரஸிலே தான் அவர்களது பிரதான கோயில், தங்கக் கோயிலாக மிளிர்கிறது. அந்தக் தங்கக் கோயிலைக் காணவே நாம் அமிர்தசரஸிற்கு செல்கிறோம் இன்று. சீக்கிய மதக் குருக்களில் நான்காவது குரு ராமதாஸ்ர். அவரை மொகலாய மன்னர் அக்பர் மிகவும் மதித்தார். அந்த அக்பர் சக்ரவர்த்தி ராமதாஸருக்கு அளித்த நிலத் திலேதான் 1577-ல் இந்த நகரை நிர்மாணித்தார் ராமதாஸர். ராமதாஸர் நிர்மாணித்த நகரம் ஆனதால் முதலில் ராம்தாஸ்பூர் என்றே அழைக்கப்பட்டது. இந்த ராமதாஸர்தான் அமிர்தக்கடல் என்னும் அமிர்தசரஸை உருவாக்கினார். இந்த ராமதாஸருடைய புதல்வர் அர்ச்சுனர், அவர்தான் இந்த சரஸின் மத்தியில் ஓர் ஆலயத்தைக் கட்டினார். அதற்கு செப்புத்தகடு வேய்ந்து அதற்குத் தங்க மெருகிட்டார். இன்னும் சொல்லப் போனால் ஹஸ்ரத் ஷேக்மியான் என்ற முகம்மதிய குரு ஒருவரே இக் கோயிலுக்கு அஸ்திவாரம் போட்டுக் கொடுத் திருக்கிறார். இப்படி சீக்கியரும் முகம்மதியரும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய கோயிலே தங்கக்கோயில். கோயிலைச் சுற்றி சீக்கியர்கள் குடியேறி அதை ஒரு பெரிய தகரமாக ஆக்கியிருக்கிறார்கள். -