பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 இந்தத் தங்கக் கோயில் இன்று அமிர்தசரஸ் நகரத்தின் நடுநாயகமாக விளங்குகிறது. அது கிட்டதட்ட 480 சதுர அடி விஸ்தீரணமுடையது. அதைச் சுற்றியிருக்கும் கரையில் நான்கு பக்கங்களிலும் சலவைக்கல் படிகள் கட்டப்பட்டிருக் கின்றன. ஏரியின் நடுவில் உள்ள கோயிலுக்குச் செல்லக் கரையிலிருந்து பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அது 200 அடி நீளம் இருக்கிறது. கோயிலைச் சுற்றி ஒரு பிரகார வீதி இருக்கிறது. பாதை எல்லாம் நல்ல சலவைக்கல் பதிக் கப்பட்டிருக்கிறது. கோயில் மூன்று அடுக்குகளோடு கூடியது. நல்ல சதுர வடிவில் அமைந்த கோயிலுக்கு மேல் மணிக்கூண்டு என்னும் விமானம் கம்பீரமாக உயர்ந்: திருக்கும், கோயில் வாயிலை வெள்ளிக் கதவுகள் அலங் கரிக்கும் விதானம் பொன் தகடு போர்த்தப்பட்டு பளபள என்றிருக்கும். மேல் மாடியில் தான் குருபீடம் இருக்கிறது. கோயிலை தர்பார் சாஹிப், ஹர்மந்திர் என்று அழைப் உவர்களே குருபீடத்தை சீஷ்மஹால் என்று அழைக் கின்றனர். கோயிலின் அடித்தளத்தில் தான் சீக்கியர்களின் வேத புத்தகமான ஆதிகிரந்தம் வைக்கப்பட்டிருக்கும். பூசை புனற்காரியங்கள் எல்லாம் இந்த கிரந்தத்திற்கு தான். கோயிலுக்குள் எல்லா மதத்தவரும் செல்லலாம், என்றாலும் சில நியதிகள் உண்டு. முதலில் காலில் காலணிகள் அணிந்து செல்லக்கூடாது. தலையை சுற்றி ஒரு துணி கட்டியிருக்க வேண்டும். வெறுந் தலையுடன் செல்லக் கூடாது. பீடி சுருட்டுகளை கோயில் பக்கத்தில் பிடிக்கக் கூடாது. உள்ளே செல்லும் அனைவரும் ஆதிகிரந்: தத்திற்கு தலை தாழ்த்தி வணக்கம் செலுத்துதல் வேண்டும். விரும்பினால் அங்கிருந்து கிரந்தத்தை பாரா யணம் பண்ணுபவர்களுடன் சேர்ந்து பாராயணம் பண்ண லாம். தொழுகை இங்கு நடப்பது போலவே முதல் மாடி யிலும் நடக்கும். தரை எல்லாம் சலவைக்கற்கள். சுவர்கள் எல்லாம் எனாமல் வேலை செய்யப்பட்டிருக்கும். இந்தக் கோயில் அமைப்பில் செலவிடப்பட்டிருக்கும் தங்கம் உலகத்திலேயே வேறு எந்தக் கோயிலுக்கும் செலவிடப்பட