பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 கல்லால் ஆனவை. பொன் தகடுகளுக்கும் குறைவில்லை. இந்த பாபா அடலும் ஒரு குருத்துவாரமாகவே கருதப்பட்டு அங்கு ஆதிகிரந்தம் வைத்து வணங்கப்படுகிறது. இத்தனையும் பார்த்து விட்டோம் என்றாலும் உடனே திரும்ப முடியாது. இங்குதான் ந ம து சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான நிலைக்களனாக அமைந்த ஜாலியன் வாலாபாக் இருக்கிறது. ஜாலியன் வாலாபாக் என்ற உடனேயே, அன்று 1919-ம் வருஷத்தில் அந்த இடத்தில் கூடிய இந்திய மக்களைத்தானே ஜெனரல் டயர் என்பவன் ஆயிரக்கணக்கில் சுட்டு வீழ்த்தியிருக்கிறான். அதற்கு மேலும் ஏன் சுடவில்லை என்று கேட்டதற்கு குண்டுகள் இல்லாதா காரணம்தான் என்று திமிராகவே சொல்லியிருக்கிறான். அதன்பின் எண்ண முடியாத பல இன்னல்களுக்கு மக்களை ஆளாக்கியிருக்கிறான். அந்த ஜாலியன்வாலாபாக்படுகொலை தான் மக்கள் சுதந்திர உணர்ச்சியைத் தட்டி எழுப்பியிருக்கிறது, சுதந்திரப் போரில் வெற்றி நடைபோட்டு மக்கள் நடக்கவும் உதவியி ருக்கிறது. அங்குள்ள கட்டிடங்கள் கூடங்களில் எல்லாம் குண்டுபாய்ந்த அடையாளம் இன்னும் தெரிகிறது. நம் நாடு சுதந்திரம் பெற்றபின் அந்த ஜாலியன் வாலாபாக்கில் கொழுந்து விட்டு எரியும் அனல்போல் சின்னம் ஒன்றையும் எழுப்பியிருக்கிறார். நாட்டில் எங்கும் சுதந்திர வாஞ்சையை காட்டினாய் கனல் மூட்டினாய் என்று பாரதியார் பாடினாரே அந்த பாட்டிற்கேற்ப அமைந்த ஞாபகச்சின்னம் போல் இருக்கிறது. அங்கு உயிர்நீத்த வீரமக்களுக்கு கண்ணிர்சிந்தி வணக்கம் செலுத்திவிட்டு அமிர்தசரஸிருந்து விடைபெற்றுத் திரும்ப <份}界”亚岛。