பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 இயற்கை அன்னை தன் மேனி அழகு முழுவதையும் வெளிப் படுத்தும் ஒரு அழகுப்பெட்டகம் அந்த நாடு. நிலமகளின் மலர் முகத்தைக் அங்கே தான் நாம் காண்கின்றோம். அங்கேதான் அவள் புன்னகை பூத்து, எழில் நிறைந்த பருவ மகளாய், இன்பப் பேரொளிபரப்பி க்ளி நடம்புரிந்து கொண்டு நிற்கிறாள். அதனால்தானே மக்கள் எல்லாம் உல்லாசமாய்ச் சில நாட்களைக் கழிக்க அங்கு ஓடுகின்றனர். உலகில் உள்ள இளங்காதலர்கள் தங்கள் தேன்நிலவு காலத்தை கழிக்க இதைவிட ஒரு சிறந்த இடத்தைத் தேர்ந்து எடுத்தல் இயலாது. நாம் எல்லாம் இறை அருளை நாடிச் செல்லும் யாத்ரீகர்கள் என்றாலும், நாமும் இயற்கை அன்னையை வழிபட அங்கு சென்று வரலாம் தானே. ஆகவேதான் நான் உங்களை அந்தத்தொலை தூரத்தில் உள்ள காஷ்மீருக்கும்.அதன் தலைநகராக விளங்கும் பூரீநகருக்கும் அழைத்துச் செல்ல விழைகின்றேன் இன்று. காஷ்மீரம் செல்ல முதலில் டில்லியிலிருந்து பதான் கோட் என்னும் இடத்திற்கு ரயிலில் செல்லலாம். பதான் க்ோட்டிலிருந்து பூரீநகருக்கு காரில் செல்லலாம். பஸ்ஸிலும் செல்லலாம். ஆனால் அப்படிச் செல்வதற்கு ஒன்றரை நாள் செல்லும், வழியில் பானிபால் என்ற இடத்தில் ஒரு இரவைக் கழிக்க வேண்டியிருக்கும். கிட்டதட்ட பத்தாயிரம் அடிக்கு மேல் உள்ள பிரதேசம் ஆனதால் தாங்க முடியாத குளிர் இருக்கும். அதற்கு எல்லாம் ஏற்ற கம்பளி உடைகளுடனேதான் செல்ல வேண்டும், பதான் கோட்டிலிருந்து விமானம் மூலமாகவும் பிரயாணம் செய்து விரைவில் பூரீநகர் சேரலாம். நல்ல வசதி உடையவர்கள் என்றால் டில்லியிலிருந்து நேரேயே ஆகாய விமானம் மூலமாக பறந்து பூரீநகர் செல்ல்லாம். ரீநகர் செல்ல முனைபவர்கள் வசதியுடையவர்களாகித்தான் இருக்க வேண்டும். என்ன புறப்படுவோமா ஆகாய விமானத்தின் மூலமாகவே. காஷ்மீரம் உருவான கதையே ரஸமானது. ஆதியில் இங்கு ஒரு பெரிய ஏரி இருந்திருக்கிறது. அந்த ஏரியின்