பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

423 அழகைக்கண்டு கைலாசபதியின் மனைவியான பார்வதியே இங்கு வந்து இந்த ஏரியில் படகோட்டிக் கொண்டு உல்லாச மாய் இருந்திருக்கிறாள். அந்த ஏரியிலே ஒர் அசுரன் பாம் புருவில் இருந்து நச்சுக்காற்றை வீசிக் கொண்டிருந்திருக் கிறான். கல் எறிந்து பார்வதி தேவி அந்த அசுரனைக் கொன்றிருக்கிறாள். பின்னர் ஏரியைத் தூர்த்து அதை ஒரு பெரிய பூங்காவாகவே அமைத்திருக்கிறார் ஒரு முனிவர். அந்த ஏரி இருந்த இடமே இன்றைய காஷ்மீர். அங்கு அசுரனை மாய்த்த இடம் தான் ஹரிபர்வதம். சரித்திர ஏடு களில் கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம்வருஷங்களுக்குமுன்பு ராஜநாராயணன் என்னும் அரசன் காஷ்மீர நகரத்தை உருவாக்கினான் என்று கூறப்படுகிறது. ராஜதரங்கினி என்ற ஒரு நூல் இதனை விரிவாகக் கூறுகிறது. நகருக்கு மத்தியில்தான் மொகலாய மன்னர்கள் அமைத்த வடிாலிமார் தோட்டம் வனப்பு மிக்கதாய் இருக்கிறது. பூரீநகரில் எங்கு தங்குவது என்ற பிரச்சினை கிடை யாது. அங்குள்ள ஆறுகளில் மிதக்கும் படகுகள் எல்லாமே சிறு சிறு வீடுகள் தான். அந்த போட் ஹவுஸ், ஒன்றையே ஏற்பாடு பண்ணிக் கொண்டு தங்கலாம். அந்த வீடுகளில் வசதியான அறைகள் எல்லாம் உள்ளதாய் இருக்கும். அந்த வீடுகளில் மிதந்து கொண்டே உல்லாசப் பிரயாணமும் போய் வரலாம். இல்லை ஆற்றில் மிதக்க அஞ்சினால் அங்குள்ள ஹோட்டல்களிலும் தங்கலாம். காஷ்மீரின் தலை நகரில் இருந்து கொண்டே குல்மார்க், பால்காம், சோனா மார்க் முதலிய இடங்களுக்கும் சென்று இயற்கை எழிலை யும் மனிதன் தன் அறிவாற்றலால் செய்து அமைத்திருக்கும் பூங்காக்களையும் கண்டு திரும்பலாம். காஷ்மீரத்து நாடோடிப் பாடல்களை கேட்டு மகிழலாம். கைத் தொழிலில் சிறந்திருக்கும் H_#$&j சாமான்களையும் வாங்கலாம். ஆனால் நாம் வந்தது இதற்காக அல்லவே. ஆதலால் அங்குள்ள கோயில்களையும் கலைக்கூடங் களையும் காண விரையலாம்.