பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

425 களும் அருவிநீர்சுனைகளும் இருக்கின்றன. கோயில் அர்த்த மண்டபம் மகாமண்டபம் முதலியவற்றோடு விளங்குகிறது. ஆனால் கருவறை மட்டும் மொட்டையாய் நிற்கிறது. கோயில் எல்லாம் 79 அடி உயரமே உள்ள சிறிய கோயில் தான். அங்கு 230 அடி நீளமும் 140 அடி அகலமும் உள்ள ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. அங்குதான் அற்புதமான வேலைபாடுகளோடு கூடிய எண்பத்தி நான்கு துரண்கள் நிற் கின்றன. இவ்வளவு இருந்தும் இக்கோயிலுக்கு மேற்கூரை யும் இல்லை கருவறையில் மூர்த்தமும் இல்லை. உலகமெல் லாம் ஒளிபரப்பும் சூரியனைப் பிடித்து ஒரு கருவறைக் குள்ளே அடைத்து வைத்து விடமுடியுமா என்ன? ஆதியில் இக்கோயிலில் மார்த்தாண்டரது சிலை இருந்தது, பின்னர் முஸ்லீம் படையெடுப்பில் கோயில் இடிக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர். கோயில் எட்டாம் நூற்றாண்டில் லலிதாதித்யன் என்னும் அரசனால் கட்டப்பட்டது என்று சரித்திரம் பேசுகிறது. ஆனால் கொஞ்சம் துருவி ஆராய்ந்தால் லலிதாதித்தியனுக்கும் முன்னால் இப் பகுதியை ஆண்ட ராமர்தித்தியன் மனைவிதான் இக் கோயில் கட்ட அங்குரார்ப்பணம் செய்தாள். என்றும், அவள் ஆரம்பித்த பணியை பின்னால் லலிதாதித்யன் நிறை வேற்றி வைத்திருக்கிறான் என்றும் தெரிவோம். சூரியனுக்கு அடுத்தபடியாக காஷ்மீர் மக்கள் நாக வணக்கம் செய்து வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறிகிறோம். தமிழ் நாட்டின் சந்நிதிகளில் எல்லாம் அரசும் வேம்பும் இணைந்து நின்று அதன் அடியில் நாகப் பிரதிஷ்டை செய்திருப்பதை நாம் அறிவோம். அதே போலத்தான் காஷ்மீர மக்களும் நாகப் பிரதிஷ்டை செய்து வணங்கியிருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டு நாகங்களுக்கு இடையில் இருக்கும் பிள்ளையாரை அங்கு காணோம், முஸ்லீம்களுடைய தக்திசுலைமான் ஸ்துாபியைப் பார்த்தோம். இந்துக்களுடைய மார்த்தாண்டர் கோயிலை யும் பார்த்து விட்டோம். புத்தர்களுக்கு என்று கோயில் 2738-27