பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

427 பூரீநகரிலிருந்து ஜீலம் நதிக்கரை வழியாக ஆறுமைல் நடந்தால் ஒரு சிறிய கோயிலைக் காணலாம். ஒரு சதுரமான பீடத்தில் நான்கு மூலையிலும் தூண்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. க ட் டிட த் தி ன் முகப்பு முக்கோணவடிவில் இருக்கின்றது. அதற்கு மேல் பிரமிட் வடிவில் இரண்டு கூரைகளும் இருக்கின்றன. இக்கோயில் ஓர் அருவிக் கரையில் அக்ரோட் மரங்கள் நிறைந்த சோலை யில் இருக்கிறது. கோயில் முழுவதும் கருங்கல்லாலேயே கட்டப்பட்டிருக்கிறது. உள்ளே உள்ள கருவறை எட்டடிசி சதுரம்தான். நான்கு பக்கமும் வாயில்கள் இருக்கின்றன. இக்கோயில் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பர். இக்கோயிலும் சூரிய நாராயணர் கோயிலே. பெயருக்கேற்ப சூரிய கிரணங்கள் நான்கு புறமும் வி ழு வது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. சூரியனைத்தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், துர்க்கை முதலியவர்களது சிற்பவடிவங்களும் இருக்கின்றன. - இக்கோயில்களை எல்லாம் தூக்கி அடிக்கும் வகையில் தான் அமர்நாத்துக் குகையில் பனிக்கட்டியால் ஆன லிங்கத் திருவுரு இருக்கிறது. ஆனால் அமர்நாத் யாத்திரை எளிதான ஒன்று அல்ல. அதற்கு அடுத்தவாரம் செல்வோம் என்ற எண்ணத்துடனேயே காஷ்மீரத்துத் தலைநகர் பூர்நகரிலிருந்து விடைபெறலாம்.