பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

429 ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர் ஆனால் இத்தனை வாதமும் அடிபட்டுப் போகிறது. அமர்நாதரைக் காணும் போது, அழல் உருவனாக மட்டும் இல்லை. அவன் ஐஸ் உருவனுமாக அல்லவா இருக்கிறான் என்று அறிகி றோம் நாம். எல்லாம் வல்ல இறைவன் பஞ்சபூதங்களின் வடிவில் இருக்கிறான் என்பதை அறிவோம். அட்டமூர்த்தி எப்படி எல்லாம் கோலம் கொள்கிறான் என்பதைத் தான் நமது அப்பர் பெருமானும் இரு கிலனாய்த் தீயாகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி அருகிலைய திங்களாய், ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தியாகி அவன் இலங்குகிறான் என்பதைத்தான் பாடியிருக்கிறாரே. தமிழ் நாட்டில் பஞ்சபூதத் தலங்கள் உண்டு. திருவாரூரில் மண்ணுருவிலும் திருவண்ணாமலையில் அனல் உருவிலும் திருவானைக்காவில் நீர் உருவிலும், திருக்காளத்தியில் காற்று உருவிலும் தில்லையில் ஆகாய வடிவிலும் இறைவன் இருந்து அருள்புரிகிறான் என்பதை முன்னரே தெரிந்திருக்கிறோம் என்றாலும், திருவானைக்காவில் ஆனைக்கா அண்ணலாக இருப்பவன் சிலை உருவில்தானே இருக்கிறான் என்று காண்போம். அவன் கருவறையில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டே இருப்பதால் மட்டுமே அவனை முழுக்க முழுக்க நீர் உருவினன் என்று கூறுவதற் கில்லை. முழுவதும் நீர் உருவிலே நிற்கும் இறைவனைக் காண நாம் அமர்நாதம் தான் செல்லவேண்டும். யாத்திரை கொஞ்சம் கஷ்டமான யாத்திரைதான் என்றாலும், தொடர்ந்து வருகிறீர்கள். செல்வோமா இ ன் று அமர்நாதத்தை நோக்கி. - இமயத்தின் சிகரத்திலே கயிலாயம், கேதார நாதம், பத்ரிநாதம், பசுபதிநாதம் அமர்நாதம் என்னும் ஐந்து rேத்திரங்கள் இருக்கின்றன. இவைகளில் பத்ரிநாதம்