பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 வேறே. ஆனால் கஷ்டப்பட்டு ஏறிய பின் மனதில் ஏற்படு கின்ற மகிழ்ச்சி இருக்கிறதே அது சொல்லித் தெரிவதன்று. இனிநாம் சென்று சேர்வது வாட்ஜகான் என்னும் இடம். இது கடல் மட்டத்திற்கு மேல் 11500 அடி. அப்போது அங்கு குளிர் எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும். இங்கிருந்து பாதை இறங்கிச்செல்லும், அந்த வழியில் ஐந்து நீர் ஊற்றுப் பெருக்கெடுத்து ஒடும். அந்த இடத்தையே பஞ்சதரணி என்கிருர்கள். அங்கு ஒரு நாள் இரவைக் கழித்தபின், யாத்ரீகர் கூட்டம் எல்லாம் அமரநாத் குகையை நோக்கிச் செல்லும் வழியில் உள்ள ஆறுகளில் எல்லாம் பனி உறைந்து யாத்திரீகர்கள் நடந்து செல்ல உதவும் காவில் எல்லாம் வைக்கோல் பிரிகளைச் சுற்றிக் கொண்டே நடக்க வேண்டியிருக்கும். பஞ்சதரணியாறு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடுகிறது. அந்த ஆற்றில் வடபுறத்தில் ஒரு செங்குத்தான மலை. அதற்கும் வட புறத்திலேதான் அமராவதி நதி, இந்த மலையையும், ஆற்றையும் கடந்துதான் அமரநாத் குகைகளுக்குச் செல்ல வேண்டும். ஆற்றுக்கு கிழக்கே ஒருமைல் துாரத்தில் ஆற்றின் வடகரையில் உள்ள குகையில் அமரநாதர் தரிசனம் தருகிறார். கடைசியில் எத்தனையோ சிரமப்பட்டாலும் அமரநாதி வந்து, சேர்ந்து விட்டோம். வழியெல்லாம் அமரநாத் கீ ஜெய்' என்று பக்தர்கள் முழுங்கிய முழக்கத்தில் நாமும் கலந்து கொண்டுதான் வழிப்பயணத்தின் துன்பங்களை எல்லாம் மறந்திருக்கலாம். அமரநாத் குகை பெரிய குகை தான். 150 அடி நீளமும், 150 அடி அகலமும் 150 அடி உயரமும் உள்ள குகை. அது நூற்றுக்கணக்கான மக்கள் உள்ளே நிற்க வசதியாக இருக்கிறது. அதன் மேற்கூரை யிலிருந்து குகையின் பின்பாகத்தில் உள்ள பாறையின் நடுவில் அமைந்து விளங்கும் சிவலிங்கத்தின்மீது தண்ணிர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அந்தச் சிவலிங்கம்தான் அமரநாதர். அவர் முழுக்க முழுக்க பனிக்கட்டி உருவினர்