பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கஞ்சன்கோடு ரீகண்டேஸ்வரர் மக்கள்து பாவத்தையெல்லாம் துடைக்கவே இயேசு நாதர் சிலுவையில் ஏறி தன் உயிரைத் தியாகம் செய்தார் என்பர். இதைவிட அரியதொரு செயலையே இறைவன் மக்களுக்காக செய்திருக்கிறார் ஒரு காலத்தில். க ைத சுவையானது. அமுதம் பெற விரும்பிய தேவர்கள் பாற் கடலைக் கடைய விரும்பினர். அரக்கர்களையும் உடன் கூட்டிக்கொண்டனர். மேருமலையையே மத்தாக நாட்டி, வாசுகியையே கயிறாகக் கொண்டு கடைந்தனர். ஆனால் அமுதம் வருமுன் ஆலகால விஷமே எழுந்தது, பாற்கடலி லிருந்து நஞ்சைக் கண்டதும் தேவர்களும் அரக்கரும் அஞ்சியோடி ஒளிந்திருக்கின்றனர். நஞ்சின் வெம்மை யைத் தாங்கமாட்டாமல். இந்த நேரத்தில் இறைவனான சிவபெருமான் அங்கு வருகிறார். எல்லோர் உயிரையும் காப்பாற்றிட நஞ்சினைத் தன் கரத்தில் ஏந்தி தானே உண்டுவிடுகிறார். நஞ்சு வ யி ற் று க் கு ள் சென்று. நாயகனையே முடித்துவிடக்கூடாதே என்று கருதி, பக்கத்தில் இருந்த உமை அத்தனின் கழுத்தை விட்டு வயிற் றுள் இறங்கு முன்பே கழுத்தைப்பிடித்து அமுக்கி நஞ்சினை அங்கேயே நிறுத்தி விடுகிறாள். அதனாலேயே இறைவனது கண்டம் கரியதாயிற்று. . நஞ்சுண்ட கண்டன்' என்ற பெயர் ஒன்றும் இறைவனுக்கு புதியதாக சேர்ந்துவிட்டது. இப்படி இறைவன் நஞ்சுண்டு தேவர், அரக்கர், மக்கள் எல் லோரையும் காத்த சீலத்தை சுந்தரமூர்த்தி நாயனார் திருப்புன்கூர்த்தேவாரப் பதிகத்தில் பாராட்டிப்பாடினார். கோலமால்வரை மத்தென நாட்டி கோள் அரவு. சுற்றிக் கடைந்து எழுந்த ஆலநஞ்சு ண்டவர் மிக இனிய அமரர்கட்கு அருள்புரிவது கருதி