பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. சிம்லாவில் சியாமளாதேவி மகாகவி பாரதியார் சக்தி உபாசகராக இருந்திருக்க கிறார். அவர்தான் கண்ட அன்னையாம் அலைமகள். மலைமகள், கலைமகளது வடிவழகை எல்லாம் பற் பல. பாக்களில் வர்ணித்திருக்கிறார். அவர் கண்ட காளியை: பின்னோர் இரவினிலே-கரும் பெண்மை அழகு ஒன்று வந்தது கண்முன்பு கன்னிவடிவம் என்றே களிகொண்டு சற்றே அருகிற் சென்று : பார்க்கையிலே அன்னை வடிவமடா ! அவள் ஆதிபராசக்தி தேவியடா ! என்று மிகுந்த உற்சாகத்தோடு, பாடியிருக்கிறார். தமிழ் நாட்டில் உள்ள காளிவடிவங்கள் அத்தனை அழகான வடிவங்களாகக் காணப்படுவதில்லை. மதுரையில் உள்ள ஊர்த்துவதாண்டவமூர்த்தியோடு போட்டியிட்டு நட மாடும் காளி ஒருத்தியே சிறப்பான வடிவமாக இருக்க பார்க்கின்றோம். வடநாட்டில் 'சாக்தம் பரவியிருக் கிறதே. காளிவழிபாடும் சிறந்திருக்கிறதே-ஆதலால் அழகிய காளிவடிவை அங்கு காணலாம் என்றே எண்ணி னேன். காளிகட்டம் என்றும் இன்றைய கல்கத்தாவிற்கே பெயர் கொடுத்த காளிகோயிலுக்கே சென்றேன். அங்குள்ள காளியோ நாக்கை வெளியில் தள்ளிக்கொண்டு மிகவும் பயங்கர வடிவிலேயே காட்சிதருகிறாள். மலர்மாலைக் குவியல்களுக்குள் அவள் புதைந்து கிடந்தாலும், அமைதி: